மெழுகுவர்த்தி ,ஊதுபத்தி உற்பத்தி நிகழ்ச்சித் திட்டம்

கெஸ்பேவ பிரதேச செயலக வலயத்தின் திவுல பிடிய கிழக்க மற்றும் திவுலபிடிய மேற்கு பிரதேச பெண்கள் அமைப்பிற்காக மெழுகுவர்த்தி மற்றும் ஊதுபத்தி உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் திவுலபிடிய ஸ்ரீமகாபோதிராஜாராமயவில் அண்மையில் இடம்பெற்றது. பொருளாதார ரீதியில் பெண்களைப் பலப்படுத்துவதை நோக்கில் பிரயோக அறிவைப் பயன்படுத்தி சுயகைத்தொழிலில் ஈடுபடும் நோக்கிலான பெண்களுக்காக இந்நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் பெண்கள் அபிவிருத்திக் குழுக்களின் அங்கத்தவர்கள் 40பேர் பங்குபற்றியதுடன் கெஸ்பேவ பிரதேச செயலகத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அதிகாரி டீனா சஞ்சீவனி வள உதவிகளை … Read more

ஈஸ்வரன் கோவிலில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்த கோமாளி: செந்தில் பாலாஜி தாக்கு

ஈஸ்வரன் கோவிலில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்த கோமாளி: செந்தில் பாலாஜி தாக்கு Source link

ஷாஜகான் போல இறந்த மனைவியின் நினைவாக வீடு கட்டி சிலை வைத்த லாரி ஓட்டுநர்.!

சேலம் மாவட்டத்தில் ஷாஜகான் போல இறந்த மனைவியின் நினைவாக லாரி ஓட்டுநர் வீடு கட்டி சிலை வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஊற்றுகிணறு, கிளாக்காடு பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் இருசன். இவரது மனைவி நீலா. இவர்களுக்கு கஸ்தூரி, லோகேஸ்வரி, ரேஷ்மா ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.  இந்நிலையில் போதிய அடிப்படை வசதி இல்லாத வீட்டில் இருசன் குடும்பத்தினர் வசித்து வந்ததால், கடந்த ஓராண்டுக்கு முன்பு இரவு … Read more

வெட்கமற்றவர்கள், ஏதோ நிகழ்ச்சிக்கு தயாராகின்றனர்: எதிர்க் கட்சிகள் விமர்சனம்..!

மோர்பி நகர் கேபிள் பாலம் விபத்தில் காயமடைந்தோர் சிகிச்சை பெறும் மருத்துவமனை பிரதமர் நரேந்திர மோடி வருகைக்காக அவசர அவசரமாக தயாராவதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் விமர்சித்துள்ளன. குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கேபிள் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் நேற்று முன்தினம் மோர்பி நகருக்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மோர்பி … Read more

முதல்வர் பேசிய முழு விவரம் இதோ..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், மாவட்டங்களில் நடைபெற்றும் வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். தொடர்ந்து ஆட்சியர்களிடம் பேசிய முதல்வர், “மழைநீர் தேங்காதவாறு கவனமாக பார்த்துக்கொள்ள … Read more

"மந்திரிப்பதவி இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும்… ஆனால், நான் என்றைக்கும் விவசாயிதான்"

“தினமும் காலையில எந்திருச்சு வயக்காட்டை ஒரு சுத்து சுத்தி வந்தாத்தான் மனசுக்கு நிம்மதியா இருக்கும்.” என்று மேய்ச்சல் சமூக கூட்டமைப்பினர் நடத்திய விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி இயல்பாக பேசினார். விழாவில் சூரிய சக்தி பம்ப்செட்… பிரதமர் மோடி பாராட்டிய காஞ்சிபுரம் விவசாயி! நாட்டின மாடு, ஆடு வளர்ப்போரை பொருளாதர ரீதியாக முன்னேற்றவும், அருகி வரும் பாரம்பரிய மேய்ச்சல் நிலத்தையும், நாட்டு மாட்டினத்தையும் பாதுகாக்கவும் மதுரையை சேர்ந்த தொழுவம் என்ற அமைப்பு பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. தென் … Read more

வடகிழக்குப் பருவமழை | முன்னெச்சரிக்கைப் பணிகளில் 2000 களப்பணியாளர்கள்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: கழிவுநீர் அடைப்பு, கழிவுநீர் தேக்கம், மழைநீர் அகற்றும் பணிகளை சீர் செய்யும் வகையில் 2000 களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2000 களப்பணியாளர்கள் களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குடிநீரின் தரத்தை உறுதிசெய்ய ஆய்வகம் மூலம் நாளொன்றுக்கு 300 குடிநீர் மாதிரிகள் … Read more

கோடை விடுமுறை போல பள்ளிக்கு மழைக்கால விடுமுறை?-அறிவிக்குமா திராவிட மாடல் அரசு!

‘வேலைக்குன்னு போனா கவர்மென்ட் ஸ்கூல் டீச்சராதான் போகணும்… வெயில் அடிச்சா லீவு… மழை பெஞ்சா லீவு… கொடுத்து வெச்சவங்கப்பா’…ஒவ்வொரு முறை பருவமழை காலத்தின்போதும் பள்ளிகளுக்கு அரசு அவ்வப்போது விடுமுறை அறிவிக்கும்போது பள்ளி ஆசிரியர்கள் குறித்து நம்மில் பலர் இப்படி விளையாட்டாக சொல்வதுண்டு. ஆனால், இந்த விடுமுறை விளையாட்டுக்கு பின்னால், கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை (syllabus) சரிவர முடிப்பதில் ஆசிரியர்கள் ஏற்படும் பணிரீதியான நெருக்கடியும்,, மழை விடுமுறைக்கு பின் குறைந்த கால அவகாசத்தில் பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயத்தால் மாணவர்களுக்கு … Read more

ரூ.50 கோடி மேட்டர், ராஜ்ய சபா சீட், சிபிஐ… AAP-ஐ கதறவிட்ட சுகேஷ் சந்திரசேகர்!

சுகேஷ் சந்திரசேகர். இவரது பெயரை கேட்டாலே, அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை மீட்டெடுக்க டிடிவி தினகரன் தரப்பில் டீலிங் பேசப்பட்ட புரோக்கர், பொருளாதார குற்றப்பிரிவு மோசடிகளில் சிக்கியவர், தொழிலதிபர்களிடம் பல லட்சங்கள் மோசடி செய்தவர், கேரளா மற்றும் பாலிவுட் நடிகைகளுடன் நெருக்கம், திகார் சிறையில் இருந்தபடியே பெரும்புள்ளிகளுடன் பேச்சுவார்த்தை உள்ளிட்ட விஷயங்கள் தான் உடனடியாக நினைவில் தோன்றும். இவரை பற்றி பரபரப்பான விஷயம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த மாதம் டெல்லி துணைநிலை ஆளுநர் … Read more

மின்சாரம், பால், குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கவும், மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை! வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுகூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

சென்னை: மின்சாரம், பால், குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கவும், மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று நடைபெற்ற  வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுகூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் நடைபெற்றும் வரும் … Read more