மழை பாதிப்புள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார்: பேரிடர் மீட்புப் படையினர் தகவல்

அரக்கோணம்: பருவமழை பெய்து வரும் நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடம் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை பாதிப்புள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம் என்று பேரிடர் மீட்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

8-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை பகல் 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் வீரபத்ரேஸ்வரா கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்து

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வீரபத்ரேஸ்வரா கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது. தேர் கவிழப் போவதை முன்கூட்டியே அறிந்த மக்கள் தேரை விட்டு தூரத்தில் நின்றதால் நல்வாய்ப்பாக பக்தர்கள் உயிர் தப்பினர்.

நாகை: போக்சோ வழக்கில் இளைஞருக்கு 21 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம்

நாகையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 22 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த காரைநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அருள்தாஸ் என்பவருக்கும் 15 வயது சிறுமிக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள்தாஸ், சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், வீட்டிலிருந்த … Read more

கடவுள் அருளால் 'காந்தாரா' வெற்றி – ரிஷப் ஷெட்டி

'கேஜிஎப் 2' படத்தை அடுத்து கன்னட சினிமாவான 'காந்தாரா' படம் ஒரு மாதத்தைக் கடந்தும் பான் இந்தியா படமாக வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படத்தின் வசூல் 200 கோடியைத் தாண்டிவிட்டது. கடந்த வாரம் ஹிந்தியில் வெளியான பெரிய நடிகர்களான அக்ஷய்குமார் நடித்த 'ராம் சேது', அஜய் தேவகன் நடித்த 'தாங்க் காட்' ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. தற்போது அந்தப் படங்களைத் தூக்கிவிட்டு மீண்டும் … Read more

டெல்லி: நரேலா தொழிற்பேட்டை பகுதி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

புதுடெல்லி, டெல்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால், 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதுவரை 3 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சிலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று டெல்லி தீயணைப்பு … Read more

டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் இன்று மோதல்

பிரிஸ்பேன், 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று (செவ்வாய்கிழமை) ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் … Read more

மனித தலையுடன் சாலையில் உலா வந்த நாய்: "அடுத்த தலை உங்களது தான்" என்ற வாசகத்தால் மக்கள் அச்சம்

வாஷிங்டன், அமெரிக்காவில் மெக்சிகோவில் உள்ள சாலையில் இரவு நேரத்தில் ஒரு நாய் துண்டிக்கப்பட்ட தலையுடன் வாயில் கவ்வியபடி சுற்று திரிந்தது. இதனை கண்ட மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றனர். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தெருநாய் சடலத்தின் தலையை கழுத்தில் பிடித்துக்கொண்டு தெருக்களில் ஓடுவதைக் காட்டுகிறது. கறி என நினைத்து அதனை சாப்பிடுவதற்கு எங்காவது எடுத்துச் செல்லலாம் என சுற்றி திரிந்துள்ளது. மெக்சிகோவின் வடக்கே உள்ள ஜாகேட்டிகேஸ் என்ற மாகாணத்தில் … Read more

Gujarat bridge collapse: அமெரிக்க அதிபர் பைடன் இரங்கல்

குஜராத்தின் மோர்பி நகரில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொங்கு பாலம் ஒன்று, நேற்று முன்தினம் மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர சம்பவத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்காணோர் காயமடைந்து, தங்களின் குடும்பத்தினர் பலரையும் இழந்துள்ளனர்.  இந்த சம்பவம் உலகையே அதிரச் செய்தது. விபத்து நிகழ்ந்த பாலம், ஐந்து நாள்களுக்கு முன்னர்தான் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், குஜாராத் வருடப்பிறப்பை முன்னிட்டு பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக விதிகளை முறையாக பின்பற்றாமல், அவசர அவசரமாக … Read more