கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள் செவ்வாய்கிழமைகளில் இனி பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை: தூய்மை பணிக்காக நடவடிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள், செவ்வாய்கிழமைகளில் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரிக்கு செல்ல வனத்துறையிடம் அனுமதி பெற்ற பின்னரே சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர். இதற்காக குறிப்பிட்ட கட்டணம் பெறப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. பேரிஜம் ஏரிக்கு அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வருவதால் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் தூய்மை செய்யும் பணி நடைபெறுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இனி செவ்வாய்க்கிழமைதோறும் சுற்றுலாப்பயணிகள் பேரிஜம் … Read more

வெள்ளம் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டியது மாவட்ட ஆட்சியரின் பொறுப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை: கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மிக கனமழை பெய்யும் என எச்சரித்து இருக்கிறார்கள் நாம் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். வெள்ளம் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டியது மாவட்ட ஆட்சியரின் பொறுப்பு என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சத்யேந்திர ஜெயின் மீது சுகேஷ் சந்திரசேகர் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மறுப்பு

டெல்லி: சத்யேந்திர ஜெயின் மீது சுகேஷ் சந்திரசேகர் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். குஜராத் கேபிள் பாலம் விபத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி இது என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை: தேங்கியிருந்த மழை நீரில் அறுந்த கிடந்த மின்கம்பியை மிதித்த ஆட்டோ ஓட்டுனர் பலி

வியாசர்பாடியில் துக்க நிகழ்ச்சிக்குச் சென்ற இடத்தில் மழை நீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஆட்டோ ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார்.  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், சென்னையில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தேவேந்திரன் என்பவர் வியாசர்பாடி பிவி.காலனி 18-வது தெருவில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சார கம்பி விழுந்து கிடந்துள்ளது. இதை … Read more

“சொந்த தொகுதியை கூட கைப்பற்றாத சர்வதேச தலைவர் ராகுல் காந்தி”- கே.டி.ராமராவ்

சொந்த தொகுதியை கூட கைப்பற்றாத சர்வதேச தலைவர் ராகுல் காந்தி என்று தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் தற்பொழுது தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தேசிய கட்சியை நடத்துவதாக நம்பிக்கொண்டிருக்கிறார். அவர் தேசிய கட்சியை நடத்துவதாக … Read more

டில்லி நரேலா தொழிற்சாலையில் தீ விபத்து: 2 பேர் பலி| Dinamalar

புதுடில்லி: டில்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலை ஒன்றில் இன்று(நவ.,01) தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி இருவர் சம்பவ இடத்தில் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, மீட்புபணி மேற்கொண்டனர். புதுடில்லி: டில்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலை ஒன்றில் இன்று(நவ.,01) தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி இருவர் சம்பவ இடத்தில் … Read more

காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த கவுதம் – மஞ்சிமா ஜோடி

நடிகர் கார்த்திக்கின் மகனாக மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனாக மூன்றாம் தலைமுறை நடிகராக சினிமாவில் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். சீரான இடைவெளியில் படங்களில் நடித்துவரும் கவுதம் கார்த்திக் கடந்த 2018ல் முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை மஞ்சிமா மோகன். அந்த படத்தில் நடித்ததில் இருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் காதல் … Read more

குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து – சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை

புதுடெல்லி, குஜராத் தொங்கும் பாலம் விபத்து குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி லலித் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் பழமைவாய்ந்த பொது கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொங்கும் பாலம் அறிந்து ஆற்றில் விழுந்ததில் இதுவரை 141 பேர் இறந்ததால் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே, … Read more

டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

பிரிஸ்பேன், 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று (செவ்வாய்கிழமை) ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் … Read more

சீனாவில் கொரோனா ஊரடங்குக்கு பயந்து தொழிற்சாலையில் இருந்து தப்பி ஓடும் ஊழியர்கள்…!

பீஜிங், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து அந்தந்த மாகாண நிர்வாகங்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. இந்த நிலையில் செங்க்சோவ் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐ-போன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 3 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த தொழிற்சாலையில் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் ஊரடங்குக்கு … Read more