தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியாகிறது…

சென்னை: தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற தனித் தேர்வுகளுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதிய தனி தேர்வர்கள் நாளை பகல் 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Result என்ற icon click … Read more

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி போராட்டம்

காஞ்சிபுரம் : ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அந்த பகுதி தனியாருக்கு சொந்தமான பகுதியில் மக்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்களை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாரிகள் லட்சுமிபுரம் வரவிருப்பதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மக்கள் … Read more

அக்டோபர் 2022ல் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.51 லட்சம் கோடி : ஒன்றிய நிதி அமைச்சகம்

டெல்லி: அக்டோபர் 2022ல் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.51 லட்சம் கோடி என ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2022 வசூலான ஜிஎஸ்டி வருவாய்க்கு அடுத்தபடியான அதிகபட்ச வசூல், தொடர்ந்து 8 மாதங்களுக்கு  ஜிஎஸ்டி வரி ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் வசூலாகியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விஷம் கொடுத்து காதலன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்த அதிர்ச்சி

திருவனந்தபுரம்: தமிழக – கேரள எல்லையில் விஷம் கொடுத்து காதலன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்த அதிர்ச்சி வெளியாகியுள்ளது. போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி? என காதலி கிரீஷ்மா கூகுளில் தேடியது அம்பலமாகியுள்ளது. வழக்கில் சிக்கிக்கொண்டால், எத்தனை வருடம் தண்டனை என்பதையும் முன்பே கிரீஷ்மா கூகுளில் தேடியுள்ளார்.

லிஃப்ட் கேட்டு பைக்கில் ஏறிய சிறுவன் செய்த கொடூர செயல் – விளாத்திகுளத்தில் அதிர்ச்சி

விளாத்திகுளத்தில் லிஃப்ட் கேட்டு பைக்கில் ஏறிய 17 வயது சிறுவன், இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கேசவன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜ். இவர் நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, மீரான் பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கார்த்திக் ராஜிடம் லிஃப்ட் கேட்டு பைக்கில் ஏறிச் சென்றுள்ளார். அப்பேது பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கார்த்திக் … Read more

'வெட்கக்கேடு': பிரதமர் வருகைக்காக அவசர அவசரமாக தயாரான மருத்துவமனை -எதிர்கட்சிகள் கண்டனம்

குஜராத்தில் தொங்கு பாலம் விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மோர்பி அரசு மருத்துவமனைக்கு பிரதமர் மோடியின் வருவதை முன்னிட்டு, மருத்துவமனையில் புதுப்பிக்கும் பணிகள் அவசர அவசரமாக நடந்தது. குஜராத் மாநிலம் மோர்பி நகரில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த தொங்கு பாலம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அறுந்து விபத்துக்குள்ளானதில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மோர்பி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்து நடந்த பகுதியை பிரதமா் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) … Read more

தெலுங்கானா கிராமத்தை தத்தெடுத்த காஷ்மீர் பைல்ஸ் தயாரிப்பாளர்

இந்த வருட துவக்கத்தில் ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய காஷ்மீர் பைல்ஸ் மற்றும் தெலுங்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கார்த்திகேயா-2 ஆகிய படங்களை தயாரித்தவர் பாலிவுட் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால். இவர் தற்போது தெலங்கானா மாநிலத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள திம்மபூர் என்கிற கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இவர் நடத்தி வரும் சந்திரகலா அறக்கட்டளை மூலமாக இந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு எல்லாவித அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க தயாராகியுள்ளார். இவரது … Read more

இந்தியாவில் புதிதாக 1,046 பேருக்கு கொரோனா தொற்று

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,046- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 54 ஆயிரத்து 638- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 294 – ஆக உள்ளது. அதேபோல், கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 07 ஆயிரத்து 943- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா … Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

பிரிஸ்பேன், 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று (செவ்வாய்கிழமை) ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் … Read more

மின் நிலையங்களை குறிவைத்து தாக்கும் ரஷியா: கீவ் நகரின் 80 சதவீத பகுதிகள் இருளில் மூழ்கின – குடிநீர் விநியோகமும் பாதிப்பு

கீவ், ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் கீவ், கெர்சன், செர்காசி பகுதிகள் இருளில் மூழ்கின. ரஷியாவின் கருங்கடல் பகுதியில் உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டியது. அதற்கு பதிலடியாக ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா நடத்திய தொடர் தாக்குதல்களால் மின் நிலையங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.இதனையடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் 80 சதவீத பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. அங்கு குடிநீர் குழாய்களும் சேதமடைந்துள்ளதால் … Read more