வாடகை முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க நடவடிக்கை

வாடகை முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க நடவடிக்கை தொழில் ரீதியாக ஈடுபடும் வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கும் முதல் கட்ட நடவடிக்கை இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி மேல் மாகாணத்தில் தொழில் ரீதியாக ஈடுபடும் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பதிவு நடவடிக்கைகளின் பின்னர், மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கும் வாரத்திற்கு 5 லீற்றர் என்ற எரிபொருள் கோட்டா எதிர்வரும் 6 … Read more

மழைநீர் ஒழுகிய அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து… நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.!

தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்காக வக்கீல் சோமசுந்தரம் என்பவர் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்தார். பின்பு பேருந்தில் பயணம் செய்த போது, இருக்கைகள் மிகவும் மோசமாக இருந்ததோடு நள்ளிரவில் பெய்த மழையால் பேருந்து கூரையில் இருந்து மழை நீர் ஒழுங்கியுள்ளது. இதனால் சோமசுந்தரம் இதுகுறித்து நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் தனக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.  இதையடுத்து இந்த வழக்கு விசாரணையில் … Read more

நயன்தாரா குழந்தை பற்றித்தான் திமுகவுக்கு கவலை: போட்டுத் தாக்கும் சி.வி சண்முகம்..!

கோவை சம்பவத்தை விட நடிகை நயன்தாராவுக்கு குழந்தை முறையாக பிறந்ததா இல்லையா, அந்த குழந்தை நன்றாக இருக்கிறதா..? என்பது தான் திமுகவுக்கு கவலை என்று, ராஜ்சபா எம்பி சி.வி.சண்முகம் கூறினார். விழுப்புரத்தில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் ராஜ்சபா எம்பி சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் பாண்டியன், திருச்சி மாவட்ட செயலாளர் எம்.பி.குமார், எம்எல்ஏ அர்ஜூனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், என்எல்சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்து இதுவரை இழப்பீடு மற்றும் வேலை … Read more

பாக்கு தோட்டத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 8 ஆண்டு சிறை – நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டவத்தைச் சேர்ந்தவர் திராவிடமணி. 54 வயதான இவர், 9, 12 வயதுடைய இரண்டு சிறுவர்களிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த 2019-ம் ஆண்டு அவரது தோட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இரண்டு சிறுவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் திராவிடமணியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த … Read more

வடகிழக்குப் பருவமழை | ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார்: அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை: “வடகிழக்குப் பருவமழைக்காக மின்வாரியத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்வாரிய தலைமையகத்தில் ஆய்வு செய்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். கோவையில் உள்ளாட்சி தினத்தையொட்டி மாநகராட்சி, நகராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “வடகிழக்குப் பருவமழையையொட்டி தமிழக முதல்வர் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, ஒவ்வொரு துறைகளுக்கும் முதல்வர் உத்தரவுகளை … Read more

சுவாமி ஊர்வலத்திற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் இன்று 5 மணி நேரம் மூடல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நடப்பு ஆண்டு ஐப்பசி திருவிழாவின் ஒருபகுதியாக சுந்தரவிலாசம் அரண்மனைப் பகுதியில் நேற்று பரிவேட்டை நிகழ்வு நடந்தது. தொடர்ந்து திருவிழாவின் மைய நிகழ்வான ஆராட்டு நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இதற்காக கிழக்கே கோட்டையில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பத்மநாப சுவாமி, நரசிங்க மூர்த்தி, கிருஷ்ணன் விக்கிரக வாகனங்கள் ஆராட்டு ஊர்வலமாக கிளம்பும். இந்நிலையில், விமான நிலையத்தின் ஓடுதளம் வழியாக செல்லும் ஆராட்டு ஊர்வலத்திற்கு வசதியாக இன்று மாலை … Read more

பாகிஸ்தானில் இம்ரான் கான் பேரணி வாகனம் மோதி பத்திரிகையாளர் மரணம்

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேரணி வாகனத்தில் பெண் பத்திரிக்கையாளர் சிக்கி உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் சதாஃப் நயிம் இம்ரான் கானை நேர்காணல் செய்வதற்காக அவரது பேரணி வாகனத்தில் ஏறி இருக்கிறார். அப்போது தவறுதலாக சக்கரத்தில் சிக்கி சதாஃப் நயிம் உயிரிழந்தார். பாகிஸ்தானில் புதிய பொது தேர்தலை அறிவிக்க வேண்டி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேரணி நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பெண் … Read more

கழிவுநீர் குழாய்கள் தூர்வாரும் பணி: சென்னையில் இன்று தொடக்கம்!

வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னையில் மழை நேற்று முதல் கொட்டித் தீர்த்து வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் சில இடங்களில் நிறைவடையாத போதும் பல இடங்களில் பணிகள் நிறைவடைந்ததால் பெரியளவில் மழை நீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். இதுஒருபுறமிருக்க கழிவுநீர் குழாய்களை தூர்வாரும் பணிகள் நடபெறுவதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. சென்னையில் 2,106 தெருக்களில் உள்ள கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி இன்று தொடங்கி நவம்பர் … Read more

பல மாதங்களுக்கு பின் இலங்கை வரலாற்றில் இன்று கொழும்பில் பதிவான மிகக் குறைந்த தங்க விலை

கோவிட் தொற்று பரவலையடுத்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. இதனை தொடர்ந்து 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரம் இவ்வாறான சூழலில் இன்றைய … Read more

சிறு வயதில் இளவரசர் சார்லசை வீட்டை விட்டு அனுப்பிய மகாராணியார்: ஒரு சுவாரஸ்ய தகவல்

சார்லஸ் சிறுபிள்ளையாக இருக்கும்போது, அவரது தாயாகிய மகாராணியார் அவரை வீட்டை விட்டு அனுப்பிவிட்டாராம். இந்த விடயத்தின் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய செய்தி உள்ளது. சார்லஸ் சிறுபிள்ளையாக இருக்கும்போது, அவரது தாயாகிய மகாராணியார் அவரை வீட்டை விட்டு அனுப்பியதைக் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய மகாராணியார் சிறு பிள்ளையாக இருக்கும்போது, பெரும்பாலான ராஜகுடும்பத்துப் பிள்ளைகளைப்போல அவரும் பள்ளிக்கு அனுப்பப்படவில்லையாம். அதற்கு பதிலாக, ஆசிரியர்கள் அரண்மனைக்கு வந்துதான் அவருக்கு பாடம் கற்பித்திருக்கிறார்கள். அதனால் அவருக்கு சில இழப்புகளும் … Read more