பாலியல் மற்றும் தீவிரவாதம் தொடர்பான பதிவுகள்… 54000 இந்திய கணக்குகளை முடக்கியது ட்விட்டர் நிறுவனம்

இந்திய பயனர்களிடம் இருந்து புகார் எழுந்ததை அடுத்து பாலியல் மற்றும் தீவிரவாதம் தொடர்பான பதிவுகளை வெளியிட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ட்விட்டர் நிறுவனம் கணக்கு முடக்கம் தொடர்பான அறிக்கையை வெளியிடுகிறது. அந்தவகையில் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 25 வரையிலான ஒரு மாதத்தில் பாலியல் மற்றும் நிர்வாண படங்கள் பதிவிட்டது தொடர்பாக 52,141 இந்திய பயனர்களின் கணக்குகளும். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பதிவுகளை போட்டதற்காக 1,982 பயனர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகள் … Read more

ஏரல் அருகே மங்கலகுறிச்சி-பெருங்குளம் சாலையில் படுகுழிகளால் விபத்து அபாயம்: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஏரல்: ஏரல் அருகே மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள படுகுழியினால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை உடனடியாக சீரமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரல் அருகே மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் மெயின் சாலையானது குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் ஆலமரம் ஸ்டாப் அருகே சாலையின் நடுவில் படுகுழி ஏற்பட்டு அதில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் இந்த சாலையில் இரவு நேரத்தில் … Read more

டி20 உலக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்த்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது

பிரிஸ்பேன்: டி20 உலக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்த்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது. பிரிஸ்பேனில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்த்தான் அணி 20 ஓவர் முடிவில் 144/8 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய இலங்கை 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து  148 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது.

குஜராத் தொங்கு பாலம் விபத்தில் 135 பேர் பலியான விவகாரம்!: நீதி விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.. நவ.14ல் விசாரணை..!!

டெல்லி: குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேர் பலியான துக்கம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோர்பி நகரில் சமீபத்தில் சீரமைக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம், கடந்த 30ம் தேதி திடீரென அறுந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 135 பேர் நீரில் மூழ்கியும், இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர். இதில் 47 பேர் குழந்தைகள் ஆவர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை … Read more

தேவர் ஜெயந்தி: போலீஸ் பாதுகாப்புடன் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கக் கவசம்

தேவர் குருபூஜைக்கு கொண்டுவரப்பட்ட தங்க கவசம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 115 ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜைக்காக கடந்த 26 ஆம் தேதி வருவாய்த் துறை அதிகாரிகள், தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் முன்னிலையில் மதுரையில் இருந்து தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக தங்கக் கவசத்தைக் கொண்டு வந்து தேவர் திருவுருவ சிலைக்கு அணிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேவரின் குருபூஜை மற்றும் … Read more

தெலுங்கில் விக்ரமை ஓவர்டேக் செய்த காந்தாரா

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் உடனடியாக டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அப்படி வெளியிட்ட இடங்களிலெல்லாம் வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் புது சாதனைகளை படைத்து வருகிறது. இதற்கு முன்னதாக கன்னடத்தில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்கள் கன்னட சினிமாவில் முதன்முதலாக பல சாதனைகளை படைத்தன. அது மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் பல சாதனைகளைப் படைத்த முதல் கன்னடப்படம் என்கிற பெருமையும் … Read more

குஜராத் பாலம் விபத்து: ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க கோரிய மனு 14ஆம் தேதி விசாரணை!

புதுடெல்லி, குஜராத் மாநிலத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்தது குறித்து ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் ஒரு நீதித்துறை ஆணையம் அமைத்து, மோர்பி பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். சுற்றுச்சூழல் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பழைய மற்றும் ஆபத்தான பாலங்கள், நினைவுச் … Read more

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 'சாம்பியன்'

பாரீஸ், பிரெஞ்சு ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீசில் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிஆட்டத்தில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, 25-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் லூ சிங் யாவ்-யாங் போ ஹான் இணையை எதிர்கொண்டது. 48 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த மோதலில் சாத்விக்-சிராக் ஷெட்டி கூட்டணி 21-13, 21-19 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. இதன் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 61.48 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 55 லட்சத்து 92 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை … Read more

ஆட்சி அதிகாரத்தில் இளைஞர்களை அதிகமாக உள்ளீர்க்கும் ஜனாதிபதியின் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் தனிநபர் பிரேரணை முன்வைப்பு

நாட்டில் தீர்மானம் மேற்கொள்வதற்கு இளைஞர்களுக்கு அதிக சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும் எனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கொள்கையை வலுப்படுத்தும் வகையிலான தனிநபர் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொவத்த முன்வைத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பு நேற்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 262ஆவது உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அதிகார கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்காக இந்த தனி நபர் பிரேரணை சட்டமூலமாக முன்வைக்கப்பட்டுள்ளது. இச்சட்டமூலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முதலாவது மற்றும் … Read more