சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் 20,000 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். கனமழையால் 25  இடங்களில் விழுந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

குஜராத் தொங்கு பாலம் விபத்து: உச்சநீதிமன்றத்தில் 14ல் விசாரணை

டெல்லி: குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பழமைவாய்ந்த பொதுக்கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அகஸ்தியர் சுற்றுச் சூழல் செயற்கைக்கோள்: இஸ்ரோ செல்லும் அரசுப் பள்ளி மாணவர்

அகஸ்தியர் சுற்றுச் சூழல் செயற்கைக்கோள் தயாரிக்க இஸ்ரோ செல்லும் 9 ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் சஞ்சய் வேலா. இவர், கவரப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 75 மாணவர்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ வேண்டுமென பிரதமர் மோடி உரையாற்றினார். இதற்காக 26 … Read more

தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்து பலி 134 ஆக அதிகரிப்பு: 9 பேர் கைது| Dinamalar

ஆமதாபாத், குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை, 134 ஆக அதிகரித்துள்ளது. விபத்து தொடர்பாக பராமரிப்பு பணி மேற்கொண்ட ‘ஒரெவா’ நிறுவனத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ஆமதாபாதில் இருந்து, 300 கி.மீ., துாரத்தில் மோர்பி என்ற நகரம் உள்ளது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் தர்பங்கா – நஜார்பாக் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், … Read more

குறி சொல்வதாக கூறி மோசடி செய்த வாலிபர்… பொறிவைத்துப் பிடித்த பெண்கள்.!

தென்காசி மாவட்டத்தில் குறி சொல்வதாகக் கூறி மோசடி செய்த வாலிபரை பெண்கள் பொறிவைத்து பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்தியபாமா. இந்நிலையில் சத்தியபாமா சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்த பாலமுருகன் என்ற வாலிபர் ஒருவர் குறி சொல்வதாக கூறி அந்தப் பகுதிக்கு வந்துள்ளார்.  அப்போது சத்தியபாமா அவரிடம் குறி கேட்டுள்ளார். இதில் உன் … Read more

மகனின் சுய இன்பம் பழக்கம்; பெற்றோர் பயப்பட வேண்டிய விஷயமா? | #VisualStory

தங்களுடைய டீன் ஏஜ் மகன் சுய இன்பம் செய்வதையறிந்த பெற்றோர்கள் பயப்பட வேண்டுமா, அல்லது அது இயல்பானதென்று கடந்துவிட வேண்டுமா? Menstruation மனித வளர்ச்சியின் ஒரு பகுதிதான் பருவமடைதல். பெண் குழந்தைகள் என்றால் மாதவிடாய் வர ஆரம்பிக்கும். இதை `மெனார்க்கி’ என்போம். விந்தணு மாதிரி இதுவே ஆண் குழந்தைகள் என்றால், 13 அல்லது 14 வயதில் பருவமடைவார்கள். அதற்கு முன்னரும் ஆகலாம். தூக்கத்தில் பாலியல் கனவுகள் வந்து விந்து வெளிவரும். இதை ஸ்பெர்மாக்கி (spermarche) என்போம். ஆணுறுப்பைத் … Read more

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தீவிரவாத தாக்குதல் என ஏன் குறிப்பிடவில்லை? – காவல்துறைக்கு அண்ணாமலை கேள்வி

கோவை: கோவை சம்பவம் தீவிரவாத தாக்குதல் என தமிழக காவல்துறையினர் ஏன் குறிப்பிடவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலில் அண்ணாமலை நேற்று தரிசனம் செய்தார். பின்னர், பாஜக சார்பில் கோயிலில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் கந்தசஷ்டி கவசத்தை அவர் வாசித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் பெரும் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. துணை தாக்குதல் எதுவும் நடைபெறாத வகையில் கோவை காவல் துறையினர் உயிரை … Read more

பிரதமர் வருகைக்காக அவசர அவசரமாக தயார் செய்யப்பட்ட மருத்துவமனை: காங்கிரஸ், ஆம் ஆத்மி கண்டனம்

மோர்பி நகர்: பிரதமர் நரேந்திர மோடி வருகைக்காக மோர்பி நகர் விபத்தில் காயமடைந்தோர் சிகிச்சை பெறும் மருத்துவமனை அவசர அவசரமாக தயாராவதை காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மோர்பி நகர் விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் உள்ளோரை காண பிரதமர் நரேந்திர மோடி வருவதை ஒட்டி அங்குள்ள மருத்துவமனை அவசர அவசரமாக புதுக்கோலம் தரித்து வருகிறது. மருத்துவமனையின் இடிபாடுகளை சரிசெய்து, கழிவறைகளை மாற்றியமைத்து அத்துடன் வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. நேற்று தொடங்கி … Read more

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை? சற்று முன் வெளியான அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் நேற்று மாலையிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில் கனமழை காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். … Read more