ஆதார் இணைப்புக்கு எதிராக கோர்ட்டில் மனு| Dinamalar

புதுடில்லி : வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவைஉச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் அபய் எஸ் ஓஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான … Read more

சுவாதி கொலை வழக்கு: `ராம்குமார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு' – மனித உரிமைகள் ஆணையம்

சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் பொறியாளர் சுவாதி கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் டி. மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அதே ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி சிறையில் மின் வயரைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. கொலை செய்யப்பட்ட சுவாதி ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக … Read more

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று கிராமசபை, பகுதி சபை கூட்டங்கள்: பம்மலில் மக்களிடம் குறைகளை கேட்கிறார் முதல்வர்

சென்னை: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் 12,525 கிராமங்களில் கிராமசபை கூட்டமும், நகர்ப்புற உள்ளாட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டமும் இன்று நடைபெறுகிறது. சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் நடக்கும் பகுதி சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பொதுமக்களிடம் குறைகளை கேட்கிறார். தமிழகத்தில் உள்ள 12,525 கிரா மங்களிலும் குடியரசு தினம் (ஜன.26), மே தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி (அக்.2) ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், … Read more

சிறை கைதிகளின் வாக்குரிமை விவகாரம் – தலைமை தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: சிறை கைதிகளின் வாக்குரிமையை பறிக்கும் சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கில் பதில் அளிக்குமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. ஆதித்ய பிரசன்னா பட்டாச்சார்யா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் (1951) 62(5)-வது பிரிவானது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்கள் எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்க முடியாது என கூறுகிறது. இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. குறிப்பாக, விசாரணைக் … Read more

சென்னை மழை… உங்க ஏரியாவுல எதும் பிரச்சினையா? இதோ மாநகராட்சி தொடர் எண்கள்!

தலைநகர் சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் விடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று (நவம்பர் 1) காலை சற்று மழை குறைந்த நிலையில் மீண்டும் வெளுத்து வாங்கத் தொடங்கியது. நகரின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சில சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையை பார்க்க முடிகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கி நிற்பது, மரம் முறிந்து விழுதல், மின்வெட்டு பிரச்சினை, மின் … Read more

பிரித்தானிய அணுமின் நிலையம் மீது பறந்த மர்ம ட்ரோன் விமானங்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்

இது கண்காணிக்கும் நடவடிக்கை அல்லது கூட்டாக தாக்குதல் முன்னெடுக்கும் சதி வேலை என நிபுணர்கள் இதுபோன்ற 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் மூன்று மட்டுமே தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது பிரித்தானியாவின் Cheshire பகுதியில் அமைந்துள்ள அணுமின் நிலையம் மீது ஆறு ட்ரோன் விமானங்கள் வட்டமிட்டுள்ளதாக அரசாங்க ஆவணங்களில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நான்கு நாட்கள் இடைவெளியில் இருமுறை நடந்துள்ளதாகவும், இது 2019ல் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெயர் குறிப்பிடாத அணுமின் நிலையம் மீதும் பல எண்ணிக்கையிலான ட்ரோன் … Read more

இரு விரல் பரிசோதனைக்கு தடை – மீறி செய்வோர் தவறான நடத்தை குற்றவாளிகள்! உச்சநீதிமன்றம்  பரபரப்பு தீர்ப்பு

டெல்லி: பாலியல் வழக்குகளில் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இரு விரல் பரிசோதனைக்கு தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், அவ்வாறு செய்வோர் தவறான நடத்தை குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம்  பரபரப்பை தீர்ப்பை வழங்கிஉள்ளது. பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்பில், இரு விரல் பரிசோதனை செய்யும் நடைமுறை உள்ளது. பெண்ணுறுப்பில் ‘ஹைமன்’ (கன்னித்திரை) என்ற சவ்வு இருக்கும். அந்த சவ்வு கிழிந்துள்ளதா?, இல்லை… கிழியாமல் அப்படியே இருக்கிறதா? என்று இரு விரல்களை உள்விட்டு சோதனை நடத்தும் நடைமுறை நாடு … Read more

மதுரை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் அருந்து தற்கொலை செய்து கொண்டனர். குடும்ப பிரச்சனையால் தாய் தனலட்சுமி (36), அவரது மகன்கள் அரிகிருஷ்ணன் (14), குபேரகிருஷ்ணன் (12) ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.