சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவ.5ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

புனேவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர்கான் ஓட்டல் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து

புனே: புனேவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர்கான் ஓட்டல் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புனே லுல்லா நகர் சவுக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் 6 வாகனங்களில் வந்த வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

'65 ரூபாதான் கட்டுவேன் ஆனா 91 ஆயிரம் வந்திருக்கு' – பெண்ணுக்கு 'ஷாக்' கொடுத்த மின்கட்டணம்

நெல்லையில் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு மின்சார கட்டணம் ரூ.91 ஆயிரத்து 130 என மெசேஜ் வந்ததால் அவர் அதிர்ந்துபோனார். நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது பாத்து (40). இவர் தனது தந்தை உதுமான் கனியுடன் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மின்வாரியத்தில் இருந்து அவரது மொபைலுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இரு மாதத்திற்கான … Read more

தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்து பலி 141 ஆக அதிகரிப்பு: 9 பேர் கைது| Dinamalar

ஆமதாபாத்: குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை, 141 ஆக அதிகரித்துள்ளது. விபத்து தொடர்பாக பராமரிப்பு பணி மேற்கொண்ட ‘ஒரெவா’ நிறுவனத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ஆமதாபாதில் இருந்து, 300 கி.மீ., துாரத்தில் மோர்பி என்ற நகரம் உள்ளது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் தர்பங்கா – நஜார்பாக் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், … Read more

இஸ்லாமாபாத் அருகே மிதமான நிலநடுக்கம்| Dinamalar

இஸ்லாமாபாத், பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடமேற்கே 303 கி.மீ தொலைவில் இன்று(நவ.,01) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிகுக்கு அடியில் 120 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டு உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத், பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடமேற்கே 303 கி.மீ தொலைவில் இன்று(நவ.,01) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிகுக்கு புதிய … Read more

 கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்துவீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை … Read more

கருங்கடலில் கப்பல்கள் பயணிக்கக்கூடாது! சேதத்திற்கு நாங்கள் பொறுப்பில்லை: ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன்,இராணுவத்தை பயன்படுத்துவதால் கருங்கடல் கடல் பாதையில் கப்பல்கள் செல்வதற்கு மாஸ்கோ எதிர்ப்பு தெரிவிக்கிறது. தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க உக்ரேனை அனுமதித்த துருக்கி மற்றும் ஐ.நா.வின் மத்தியஸ்த உடன்படிக்கையை இடைநிறுத்திய பின்னர், கருங்கடல் பாதுகாப்பு வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று நேற்று (2022 அக்டோபர் 31) ரஷ்யா அறிவித்தது. “உக்ரேனிய தலைமை மற்றும் உக்ரைனின் ஆயுதப்படைகளின் கட்டளை ரஷ்ய கூட்டமைப்பிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படுத்துவதால், பாதுகாப்பு தாழ்வாரத்தில் கப்பல்களை இயக்குவது … Read more

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை.!

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். வடகிழக்கு பருவ மழை கடந்த 29ம் தேதி  தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் … Read more