`ஆபாசப் படம் எடுத்து மிரட்டுறாங்க’ – சகோதரர்கள், கணவனுக்கு எதிராக புகாரளித்த பெண்

திருச்சி தெற்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அனிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்து இருக்கிறார். தன்னுடைய 12 வயது, 10 வயது மகன்களுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய இரு மகன்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அனிதா, ‘என்னுடைய சொத்தை அபகரிப்பதற்காக என்னுடைய கணவரும், என் இரு சகோதரர்களும் சேர்ந்து கொண்டு எனக்கு தொடர்ந்து பிரச்னை கொடுத்து வருகின்றனர். மேலும், என்னை ஆபாசமாகப் படம் … Read more

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்றிரவு சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் முருகனுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி விழாவையொட்டி திருவண்ணாமலை ஸ்ரீ வட வீதி சுப்பிரமணியர் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஸ்ரீ பாலசுப்ரமணி … Read more

தமிழகத்தில் வணிக வரி, பதிவுத் துறை வருவாய் கடந்த ஆண்டைவிட ரூ.23,066 கோடி அதிகம்: அமைச்சர் பி.மூர்த்தி தகவல் 

சென்னை: தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் வணிக வரி, பதிவுத் துறைகளின் வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூ.23,066 கோடி கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிக வரி வளாக கூட்டரங்கில், அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், வணிக வரி இணை ஆணையர்களின் பணித்திறன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வணிகவரி, பதிவுத் துறையில் அரசின் வருவாயை … Read more

நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரு விரல் சோதனை பாடத்தை நீக்க நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மருத்துவக் கல்லூரி பாடப்புத்தகத்தில் இருந்து, பெண்களின் கன்னித்தன்மையைப் பரிசோதிக்கும் இரு விரல் பரிசோதனை தொடர்பான பாடத்தை நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள் ளாக்கப்படும்போது, அப்பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட் டுள்ளாரா என்பதை ஹைமன் எனப்படும் கன்னித்திரை சவ்வை வைத்து தெரிந்து கொள்வதற்காக இரு விரல் பரிசோதனை செய்யும் முறை கடை பிடிக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நபர் புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு, மருத்துவ அறிக்கைக்காக இந்த … Read more

ஓபிஎஸ் தலைமையில் ஆட்சி: புதிய நிர்வாகிகள் உறுதிமொழி!

அதிமுக உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் புதிய வடிவம் எடுத்து வருகிறது. ஓ.பன்னீர் செல்வத்துக்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு இல்லை என கூறப்பட்ட நிலையில் புதிய நிர்வாகிகளை அறிவித்து வருகிறார். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மாறி மாறி எதிர்தரப்பினரை கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்புகளை வெளியிட்டனர். ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வம் தென் … Read more

இளவரசி டயானா கமிலாவால் தான் இறந்தார்! அனுபவித்த துன்புறுத்தல்… கமிலாவின் மருமகன் வேதனை

கமிலாவின் உறவினர் லூக் பார்க்கர் பவுல்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டி. இளம் வயதில் அனுபவித்த துன்புறுத்தல் குறித்து நினைவுக்கூர்ந்தார். கமிலாவின் முதல் கணவர் வழி உறவினர் இளம் வயதில் தான் எப்படியெல்லாம் அச்சுறுத்தல், துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்பதையும் அதற்கு காரணம் அரச குடும்பத்தாருடன் உறவினராக இருந்தது தான் எனவும் கூறியுள்ளார். லூக் பார்க்கர் பவுல்ஸ் என்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆவார். இவர் கமிலாவின் முதல் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸின் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். அதன்படி … Read more

நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை

நெல்லை: நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரின் வீடுகளில் காலை 7.30 மணி முதல் போலீசார் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். சாஹிப் முகமது அலி, சையது முகமது புகாரி, முகமது அலி, முகமது இப்ராஹிம் ஆகியோர் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வந்தனர். 2019-ல் இலங்கை தேவாலயத்தில் குண்டுவெடித்தது தொடர்பாக ஏற்கனவே 4 பேரிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தி இருந்தது.

ஓராண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கும்

மதுரை: ஓராண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கும் என தகவல் வெளியாகியது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை ஜப்பான் சர்வதேச நிறுவன முகமை அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நவம்பர் 5-ம் தேதி வரை கனமழை தொடரும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.