இருவரை காதலித்து ஒருவரை திருமணம் செய்த கர்ப்பிணி கொடூர கொலை!

ஈரோடு அருகே 4 மாத கர்ப்பிணி காதலியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம் ராஜபாளையத்தில் கார்த்தி – பிருந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி 4 மாத கர்ப்பிணியாக இருந்த பிருந்தா வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்த பிருந்தா, திருமணத்திற்கு முன்பு இருவரை காதலித்து … Read more

ஹெல்மெட் கட்டாயம் புதுச்சேரியிலும் அமல்| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலாகிறது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி பைக் ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். தவறினால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால் இந்த உத்தரவு புதுச்சேரியில் பின்பற்றப்படாமல் இருந்தது. ஹெல்மெட் அணியாததால், கடந்தாண்டில் 84 பேரும், இந்தாண்டில் இதுவரை 74 பேரும் இறந்துள்ளனர்.அதனால், தேசிய சாலை பாதுகாப்பு குழு, புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயம் அணிய நடவடிக்கை எடுக்க மாநில சாலை … Read more

செண்பகவல்லித் தாயாரும் ஜெகந்நாதப் பெருமாளும் அருளும் நந்திபுர விண்ணகரக் கோயிலில் அஷ்டமித் திருவிழா!

பொன்னியின் செல்வன் புத்தகத்தின் முதல் பாகத்தின் நாற்பது மூன்றாவது அத்தியாயத்தில் பழையாறை நகரத்தின் தோற்றத்தை விவரிப்பார் கல்கி. குந்தவை தேவியைக் காண வரும் வந்தியத்தேவன் பழையாறை நகரத்தை அரிசிலாற்று தென்கரையில் நின்று ரசிப்பதாகக் கதை அமைந்திருக்கும்.  சேக்கிழார் பெருமான் பாடலில்,  “தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்துபாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை” எனக் குறிப்பிட்டு அந்த நூலில் கல்கி அழகாய் வர்ணித்திருப்பார். அதில் வந்தியத்தேவன் குந்தவை பிராட்டியைச் சந்திக்க வந்த நாளன்று கிருஷ்ண ஜயந்தி. திருவிழாக் … Read more

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு – கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ திட்டம்

கோவை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், முபின் வீடு உள்ளிட்ட இடங்களில் மீண்டும் சோதனை நடத்தவும் என்ஐஏ முடிவு செய்துள்ளனர். கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகில் கடந்த 23-ம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில், காரை ஓட்டிவந்த ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் வெடி பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் … Read more

குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து – மகளை காப்பாற்றி உயிர் துறந்த தந்தை

குஜராத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே மோர்பி நகரில் மச்சு ஆற்றில் மீது அமைந்திருந்த தொங்கு பாலம் நேற்று முன்தினம் அறுந்து விழுந்ததில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் மிக மோசமான பாலம் இடிந்து விழுந்த விபத்துகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த அசோக், அவரது மனைவி பாவ்னாபென், 7 வயது மகள் ஆகியோர் மோர்பியின் தொங்கு பாலத்துக்கு சென்றனர். பாலம் அறுந்ததில் 3 பேரும் நதியில் … Read more

நள்ளிரவில் இறங்கிய சென்னை மேயர் பிரியா… வெளுத்து வாங்கிய மழை… சொன்னதும், பார்த்ததும்!

இரவு முதல் விடாமல் கொட்டித் தீர்த்த மழை. போச்சு… அப்படினா? சென்னை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்குமே? இப்படித்தான் பலருக்கும் எண்ணங்கள் தோன்றும். ஆனால் களநிலவரத்தை பார்க்கையில் ஒட்டுமொத்தமாக அப்படி சொல்லிவிட முடியாது. ஒருசில பகுதிகளில், சாலைகளில், தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றாலும் சில இடங்களில் தண்ணீர் ஓடிச் செல்வதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் நேற்று நள்ளிரவே களத்திற்கு சென்றுவிட்டார். மழைநீர் தேங்கியுள்ள இடங்கள், அவற்றை விரைவாக வெளியேற்றுவதற்கான … Read more

வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று ஆலோசனை!

சென்னை: சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில்,  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை கலக்கிறார். வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வரும் நிலையில் சென்னை செங்குன்றத்தில் அதிகபட்சமாக 13 செண்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று இரவு முதல் துவங்கிய மழையானது காலை வரை விடிய விடிய கொட்டி தீர்த்து உள்ளது. செங்குன்றம் பேருந்து நிலையம் மற்றும் அதன் … Read more

நவம்பர் 1: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 164-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 164-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.