மழை காரணமாக செய்யாறு வட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை: மழை காரணமாக செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு வட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. செய்யாறு சுற்றுவட்டாரத்தில் இன்று ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்தார்.

சென்னையில் 15 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்காமல் வெளியேறியது: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் 15 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்காமல் வெளியேறியுள்ளது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேறியது. வழக்கமாக மழைநீர் தேங்கும் ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வெளியேறியது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் எப்ஐஆர் ரத்து இல்லை; உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் எப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது என தெரிவித்த உச்ச நீதிமன்றம் வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி ரூ. 3 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஜனவரி மாதம் 12ம் … Read more

பேரரசன் ராஜராஜ சோழன் சதய விழா: விழாக் கோலம் பூண்டுள்ள தஞ்சை

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய பேரரசன் ராஜராஜ சோழனின் 1037 ஆம் ஆண்டு சதய விழாவை ஒட்டி நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல் ஜொலிக்கிறது. தமிழர்களின் கட்டட கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய பேரரசன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அவர பிறந்த தினம் அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 1037 ஆம் … Read more

வீட்டு கதவுக்கு பிங்க் நிற பெயின்ட் ரூ.19 லட்சம் அபராதம்: அரசு எச்சரிக்கை| Dinamalar

எடின்பர்க் : ஸ்காட்லாந்து நாட்டில் வீட்டு கதவுக்கு பிங்க் நிற பெயின்ட் அடித்த பெண்ணிற்கு ரூ.19 லட்சம் அபராதம் விதிக்க நேரிடும் என அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் நியூ டவுன் பகுதியில் வசிப்பவர் மிராண்டா டிக்சன் 48. வீட்டின் முன் கதவுக்கு கடந்த ஆண்டு பிங்க் நிற பெயின்ட் அடித்தார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் 2019-ல் தனது பெற்றோரிடம் இருந்து அந்த வீட்டை வாங்கி 2 ஆண்டுகளாக புதுப்பித்தார். … Read more

தமிழ் வழி மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் – அமைச்சர் மா.சுப்ரமணியன் கோரிக்கை

தமிழ் வழி மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் – அமைச்சர் மா.சுப்ரமணியன் கோரிக்கை Source link

#BREAKING  : பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை.!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று சற்று குறைள்ளது. சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2,009க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இந்த நிலையில் … Read more

Motivation : தன்னை உணருதல் எப்படி உசைன் போல்டிற்கு உதவியது?| NandaKumar IRS

கல்வி விகடன் யூடியூப் சேனலில் ‘Monday Motivation’ என்ற நிகழ்ச்சி மூலம் தன்னம்பிக்கை உரைகளை வழங்கிவருகிறார் திரு.நந்தகுமார் IRS. இந்த வாரத்திற்கான நிகழ்ச்சியில் தன்னை உணர்தலைப் பற்றிப் பகிர்ந்திருக்கிறார் அவர். ” நாம் நினைத்ததை போல் இருக்க வேண்டும் என்றால் நமக்குத் தன்னை உணருதல் மிகவும் அவசியம். ‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ என்ற விவேகானந்தரும் இதையே தான் கூறுகிறார். இந்த பொன்மொழி தன்னையறிதலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.  உசைன் போல்ட் தான் உலகின் அதிவேக மனிதராக … Read more

சுவாதி கொலை வழக்கு | ராம்குமார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு – மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை: சுவாதி கொலை வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமாரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். … Read more

குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

அகமதாபாத்: குஜராத்தில் தொங்கு நடைபாலத்தில் நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே மோர்பி நகரில் மச்சு ஆற்றில் மீது அமைந்திருந்த தொங்கு பாலம் நேற்று முன்தினம் அறுந்து விழுந்ததில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தெரியவந்துள்ளது. நாட்டின் மிக மோசமான பாலம் இடிந்து விழுந்த விபத்துகளில் இதுவும் … Read more