அடுத்த 3 மணி நேரம் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவள்ளூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை … Read more

ரஷ்யா நடத்திய தாக்குதல்களால் உக்ரைனின் சில பகுதிகள் இருளில் மூழ்கின..!

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனின் கீவ், கார்கிவ் மற்றும் செர்காசி பகுதிகள் இருளில் மூழ்கின. முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதல்களால் மின் நிலையங்களில் கடும் சேதம் ஏற்பட்டதையடுத்து கீவ் நகரில் நேற்று 80 சதவீதம் மின்வெட்டு ஏற்பட்டது. குடிநீர் குழாய்களும் சேதமடைந்ததால் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை மோசமாக இருப்பதால் தண்ணீரை சேமித்து வைக்குமாறு கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ வலியுறுத்தியுள்ளார்.  Source link

உள்ளாட்சி தினம்: இன்று நகர சபை கூட்டங்களை துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தை போல இன்று நகர சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை நகர சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான எம்.பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் 6ம் வார்டில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.116.50 குறைந்தது

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.116.50 குறைந்துள்ளது. வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.116.50 குறைந்து ரூ.1893-க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இன்ஸ்டாகிராம் சேவையில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டதாக நிர்வாகம் தகவல்

இன்ஸ்டாகிராம் சேவையில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் பயனாளர்கள் பலர் தங்களது இன்ஸ்டாகிராம் கணக்குகளை பயன்படுத்த முடியாமல் தவித்து வந்தனர். 

தேனி: தீபாவளி துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக போலி நிருபர் உட்பட இருவர் கைது

தீபாவளி துப்பாக்கியை காட்டி மிரட்டிய போலி நிருபர் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரின் கணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.வாடிப்பட்டி ஊராட்சியின் ஆறாவது வார்டு உறுப்பினராக இருப்பவர் அழகம்மாள். இவர், தனது வார்டு பகுதிகளில் முறையான தூய்மை பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என தொடர்ச்சியாக அதே பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் முறையிட்டு தொடர்ந்து தனது பகுதிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வற்புறுத்தி … Read more

வாழை இலை அல்லது வெற்றிலை… இட்லி மாவு ஒரு வாரம் வரை புளிக்காமல் இருக்க ஈஸி ட்ரிக்!

வாழை இலை அல்லது வெற்றிலை… இட்லி மாவு ஒரு வாரம் வரை புளிக்காமல் இருக்க ஈஸி ட்ரிக்! Source link

“தீபாவளி பரிசு யார் கொடுத்தது?” – கேள்வி எழுப்பிய திமுக நிர்வாகி; மன்னிப்பு கேட்ட தஞ்சை மேயர்!

தஞ்சாவூர் தி.மு.க-வில் மாநகரம் சார்பில் நடைப்பெற்ற கூட்டத்தில், `வார்டு செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்களுக்கு எதிராக செயல்படுவதை மாநகர செயலாளரான மேயர் நிறுத்தி கொள்ள வேண்டும்’ என நிர்வாகி ஒருவர் எச்சரிப்பது போல் கோஷ்டி பூசல் குறித்து மேடையில் வெளிப்படையாக பேசியது பரபரப்பை ஏற்ப்படுத்தியது. தி.மு.க பகுதி கழக செயலாளரான நீலகண்டன் தஞ்சாவூர் தி.மு.க-வில் மாநகர கழகம் சார்பில் மாநகர செயல் வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. மாநகர செயலாளரும், மேயருமான சண்.இராமநாதன் கூட்டத்திற்கான ஏற்பாட்டை செய்திருந்தார். இதில் … Read more

ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்கள் 41 பேருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் – ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் முதல்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும்,பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று 2021-22-ம் ஆண்டுக்கான செய்தி, விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு, அதன்படி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் நலனில் அதிக அக்கறை கொண்ட முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, … Read more

சீன வீரர்களுடனான கல்வான் மோதல் எதிரொலி – வீரர்களுக்கு ஆயுதமின்றி போர் பயிற்சி

புதுடெல்லி: இந்தியா, சீனா இடையிலான எல்லை லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரை நீள்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான எல்லையில் அசல் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) உள்ளது. சுமார் 3,500 கி.மீ. நீளம் கொண்ட இந்தக் கோடு நெடுகிலும் இந்தோ-திபெத் எல்லைப் படையினர் (ஐடிபிபி) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 98 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். கடந்த 1996-ம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தப்படி, இருதரப்பு வீரர்களும் ஒருவர் மீது மற்றொருவர் துப்பாக்கிகளை பயன்படுத்தக் கூடாது. இந்த … Read more