சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளை தாங்க முடியாமல் ஐபோன் ஆலையில் இருந்து ஊழியர்கள் தப்பியோட்டம் – வீடியோ வைரல்
பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஐபோன் ஆலையிலிருந்து புலம்பெயர் பணியாளர்கள் தப்பிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து சீனாவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஸ்டீபன் மெக்டொனல் ட்விட்டரில் கூறியுள்ளதாவது: சீனாவில் செங்ஸு நகரில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குதான் ஆப்பிளின் ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கானின் பெரிய ஆலை அமைந்துள்ளது. அந்த ஆலையில் பணிபுரிந்த ஏராளமானோர் கரோனா கட்டுப்பாடுகளுக்கு அஞ்சி வேலியைத் தாண்டி குதித்து தப்பியோடினர். … Read more