உலகக்கோப்பை கால்பந்து 2022: டென்மார்க் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வென்றது ஆஸ்திரேலியா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு டி-யில் உள்ள டென்மார்க் – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டென்மார்க் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

மோடி 100 தலை ராவணன் விவகாரம்; தேர்தல் முடிவு காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: குஜராத் மாஜி முதல்வர் பேட்டி

ராஜ்கோட்: குஜராத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், ‘பிரதமர் மோடி தனது பிரசாரத்தின் போது தன்னைப் பற்றி  மட்டுமே பேசுகிறார். வேறு யாரையும் பார்க்க வேண்டாம்; இந்த மோடியைப் பார்த்து  வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்கிறார். உங்கள் முகத்தை நாங்கள் இன்னும் எத்தனை முறை பார்க்க வேண்டும்?  உங்களுக்கு எத்தனை உருவங்கள் உள்ளன? ராவணனைப் போல உங்களுக்கு 100 தலைகள்  உள்ளதா?’ என்று பேசினார். இவரது … Read more

112 கிமீ வேகத்தில் வீடியோ எடுத்தபடியே பயணம்! பைக் கவிழ்ந்ததில் நேர்ந்த சோகம்!

இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணம் மேற்கொண்ட இருவர், கீழே விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தரமணி பகுதியை சேர்ந்தவர்கள் பிரவின்(19), மற்றும் ஹரி(17), இருவரும் நேற்று முன் தினம் தரமணி 100 அடி சாலையில், இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அதிவேகமாக 112 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளனர். பிரவின் வாகனத்தை ஓட்ட, பின்னால் அமர்ந்திருந்த ஹரி செல்போனில் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை வீடியோ பதிவு செய்து கொண்டே சென்றுள்ளார். … Read more

மும்மூர்த்திகளில் ஒருவர் சம்மதித்தால் கடுவா பார்ட் 2 உண்டு ; பிரித்விராஜ்

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் கடுவா. ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவான இந்தப்படம் வெளியாகி 50 நாட்கள் கடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி உள்ளனர். இந்த படம் நிஜத்தில் வாழ்ந்த கடுவாக்குன்னால் குருவச்சன் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருந்தது. இந்த நிலையில் இந்த வெற்றி விழாவின்போது பேசிய பிரித்விராஜ், இந்தப் படத்திற்கு இரண்டாம் பாகம் உண்டு என்றும், அது இந்த … Read more

மனித தவறினால் அதிகளவு எண்ணெய் கடலில் கலப்பதனால் உயிரினங்கள் அழிகின்றன

கடல்வளத்தை பாதுகாப்பது தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு செயலமர்வு  கடல்சார் சூழல் பாதுகாப்பு  அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரி.தயாரூபன்  தலைமையில்  இன்று (30) நடைபெற்றது. இதன் போது கடல்சார் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் கடலில் எண்ணெய் கலத்தல், சர்வதேச கப்பல் வழிப்பாதையில்  இலங்கை அமைந்துள்ளதால் நிகழும் எண்ணெய் கசிவு, போன்ற விளைவுகளைத் தவிர்ப்பது தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி அதிகாரசபை தெளிவுபடுத்தியது. மனித தவறினால் அதிகளவு எண்ணெய் கடலில் கலப்பதனால் கடல்வாழ் உயிரினங்களின் பல்வகைமை அழிவதும்  … Read more

திருச்சி- தஞ்சை இடையே தாமதமாகும் 2 ரயில்வே சுரங்கப் பாதைகள்: அவதியில் மக்கள்

திருச்சி- தஞ்சை இடையே தாமதமாகும் 2 ரயில்வே சுரங்கப் பாதைகள்: அவதியில் மக்கள் Source link

கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தில் நிலம் ஒதுக்க டிச.15 கடைசி நாள்! தமிழக அரசுக்கு கெடு விதித்த மத்திய அரசு!

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தில் நிலம் இல்லாத மக்களுக்கு வீடு கட்டுவதற்கு நிலம் வழங்குவதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கான நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில் நிலம் இல்லாத மக்களுக்கு நிலம் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் 5,24,000 பயனாளர்களில் இதுவரை 2,75,000 பயனாளர்களுக்கு பல்வேறு மாநிலங்கள் நிலம் ஒதுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. … Read more

பள்ளியில் குண்டுவெடிப்பு – 10 மாணவர்கள் பலி!!

வடக்கு ஆப்கானிஸ்தானில் மதப்பள்ளி ஒன்றில் குண்டு வெடித்ததில் 10 மாணவர்கள் உயிரிழந்தனர். தலிபான்கள் ஆட்சி செய்துவரும் ஆப்கானிஸ்தானில் அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அதே போல் அங்கு மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று வடக்கு சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் மேலும் பலர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதப் பள்ளியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து தீவிர … Read more

2 மாதங்களாக நாணயங்களை விழுங்கிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர்; அறுவை சிகிச்சையில் திகைத்த மருத்துவர்கள்!

கர்நாடகாவில், வயிற்றுக்கோளாறு என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் வயிற்றிலிருந்து மருத்துவர்கள் 187 நாணயங்களை அகற்றி திகைத்துப்போன சம்பவம் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரைச்சூர் மாவட்டத்திலுள்ள லிங்சுகூர் நகரில் வசிக்கும், மனநலம் பாதிக்கப்பட்ட தியாமப்பா ஹரிஜன் என்பவர், வாந்தி மற்றும் வயிற்றுக்கோளாறு காரணமாக ஹனகல் ஸ்ரீ குமரேஷ்வர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சை அங்கு அவரை பரிசோதனை செய்ததில், அவரின் வயிற்றில் நாணயங்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பின்னர் மருத்துவர்கள் உடனடியாக … Read more

வெளிநாடுகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை: தமிழக இளைஞர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்

மதுரை: வெளிநாடுகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் ஏமாற்றும் கும்பலிடம் தமிழக இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மதுரை எஸ்பி சிவபிரசாத் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு. தமிழகத்தைச் சேர்ந்த பல உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர், கம்போடியா நாடுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் வேலைக்கென அதிக சம்பளம் தருவதாக சில மோசடி கும்பல் அழைத்துச் செல்கிறது. சுற்றுலா விசாவில் அழைத்துச் … Read more