டெல்லி: அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசின் வழக்கறிஞர் அழைப்பு விடுத்தார். ஜல்லிக்கட்டு காளையானது 6 வயது வரை போட்டிகளில் பங்கேற்கும், காளைகளை தங்களது குடும்ப உறவு போன்று வளர்ப்பது தமிழர்களின் வழக்கம் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது