182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவும், டிசம்பர் 5ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிது.
கால் நூற்றாண்டுக்கு மேலாக பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத்தில், இம்முறை காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன.
குஜராத்தில் இன்று வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில், அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற உறுதியாக தெரிவித்தார்.
வடமேற்கு மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் வருகிற மார்ச்சில் இருந்து இலவச மின்சாரம் கிடைக்கும். டெல்லியில் இலவச மின்சாரம் தருவோம் என நாங்கள் வாக்குறுதி அளித்தோம்.
அந்த நேரத்தில் எதிர்க்கட்சியினர் அது எப்படி உங்களால் முடியும் என கேட்டனர். ஆனால், நாங்கள் செய்தோம். பஞ்சாப்பிலும் இதே நிலைமைதான். குஜராத்திலும் நாங்கள் வருகிற மார்ச் மாதத்தில் இருந்து மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவோம் என கூறினார்.
சிலர் எங்களை பார்த்து, நாங்கள் பா.ஜ.க.வின் பி அணி என்றும், வேறு சிலர் காங்கிரசின் பி அணி என்றும் கூறி வருகின்றனர். ஆனால், நாங்கள் 130 கோடி மக்களின் ஏ அணி என்று அவர் கூறினார்.
நெவ்ஸ்டம்.in