தமிழக அரசின் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழக்கமான பரிசோதனைக்காக நேற்று மாலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இன்று அதிகாலை அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் பரவின. அமைச்சரின் குடும்ப மருத்துவரான செங்குட்டுவன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று இருந்ததால் அமைச்சரை சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய மருத்துவர் செங்குட்டுவன் அமைச்சர் ராமச்சந்திரனுக்கு தகவல் கொடுத்ததால் வழக்கமான பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
தற்பொழுது மருத்துவமனையில் அமைச்சர் நலமாக இருப்பதாகவும் இன்று மாலை ரீசார்ஜ் ஆவார் என்றும் அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மருத்துவமனைக்கு சென்றது குறித்து தவறான செய்தி வெளியிடுவதாக அமைச்சர் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. அவர் நலமாக உள்ளார். இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வழக்கமான பணிகளை தொடர்பான அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அமைச்சரின் உடல்நலம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.