இந்திய எதிர்நோக்கவுள்ள கொடூர வெப்ப அலை: ஆண்டுக்கு 20 கோடி பேர் பாதிக்கப்படுவர்

இந்தியாவில் 2030 ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 20 கோடி பேர் வெப்ப அலைக்கு ஆளாக நேரிடலாம் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் குளிரூட்டும் துறையில் கால நிலை முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அனர்தம் குறித்து குறிப்பிட்டுள்ளது.

காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளால் உலகளாவிய வெப்பம் அதிகரித்துவரும் நிலையிலேயே இந்த அனர்த்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

* 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 16 கோடி முதல் 20 கோடிப்பேர் இந்தியாவில் கொடிய வெப்ப அலைகளுக்கு ஆளாகிற அபாயம் உள்ளது.

* இந்தியாவில் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. மாற்றுமுறை மற்றும் புதுமையான ஆற்றல் திறன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இடங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக 2040-ம் ஆண்டுவாக்கில் 1.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.131 லட்சம் கோடி) முதலீட்டு வாய்ப்பு உருவாகும்.

* அதிக ஆற்றல் கொண்ட பாதைக்கு மாறுவது, அடுத்த இரு பத்தாண்டுகளில் கார்பன்டை ஆக்சைடு அளவை மிகவும் குறைப்பதற்கு வழிவகுக்கும். 15 வினாடிகளுக்கு ஒரு ஏ.சி. எந்திரம்

* மேலும் பசுமைக்குடில் வாயுக்கள் அளவையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்க முடியும். 37 லட்சம் வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.

* போக்குவரத்தின் போது வெப்பத்தால் உணவு இழப்பு ஆண்டுக்கு 13 பில்லியன் டாலர்  அளவுக்கு ஏற்படலாம்.

* தற்போதைய அளவுடன் ஒப்பிடுகையில் 2037-ம் ஆண்டுக்குள் குளிரூட்டும் தேவை 8 மடங்கு அதிகரிக்கும். அதாவது ஒவ்வொரு 15 வினாடிக்கும் ஒரு குளுகுளு சாதன (ஏ.சி.எந்திரம்) தேவை ஏற்படும். இதனால் அடுத்த இரு பத்தாண்டுகளில் பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வு 435 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.