இந்த வருடத்தின் கடைசி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில், இன்று முதல் என்ன புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன என்று பார்க்கலாம்.
மோசடியில் இருந்து உங்களை பாதுகாக்க, டெபிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம்-இல் பணம் எடுப்பதற்கான நடைமுறையை பஞ்சாப் நேஷ்னல் பேங்க் திருத்தியமைத்துள்ளது. இப்போது உங்கள் கார்டை மெஷினில் இன்சர்ட் செய்த பின் , உங்கள் ரிஜிஸ்டர்ட் மொபைல் நம்பருக்கு ஓடிபி (OTP) வரும். அதனை என்டர் செய்து வழக்கம் போல ஏடிஎம் கார்டின் பின் நம்பரை பயன்படுத்தவும்.
ஓய்வூதியதாரர்கள் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு நேற்றே கடைசி நாள். அதனால் இன்று மாதம் பிறந்துள்ளதால் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்காதவர்களுக்கு பென்ஷன் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த மாதம் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையை குறைக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குளிர்காலம் என்பதால் பல ரயில்களை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பனிமூட்டம் காரணமாக ரயில்வே தனது நேர அட்டவணையை மாற்றும் என்பதால் டிசம்பர் மாதத்தில் ரயில்வே நேர அட்டவணை திருத்தம் செய்யப்பட்டு, புதிய நேர அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறைப் பட்டியலின்படி, டிசம்பர் மாதம் மொத்தம் 14 விடுமுறை நாட்கள் வங்கிகளுக்கு இருக்கின்றன. இதில் வார இறுதி நாட்கள், இரண்டாவது/நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்கள் அடங்கும். எனவே வங்கிக்கு செல்லும்முன் வேலை நாளா உறுதி செய்து கொள்வது அவசியம்.
newstm.in