சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
கண்டி, பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று (30) இந்த போட்டி நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி ,முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ஓட்டங்களை பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக Ibrahim Zadran, 4 சிக்ஸர்கள் 15 பவுண்டரிகள் அடங்கலாக 162 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக Kasun Rajitha, 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
314 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 49.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 314 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பாக Kusal Mendis 67 ஓட்டங்களையும் Charith Asalanka ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக Rashid Khan 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் இலங்கை வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் 1- 1 என சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது. தொடரின் இரண்டாவது போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது