உலக கோப்பையில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட மெஸ்ஸி: சூப்பர் 16-க்கு அர்ஜென்டினா தகுதி


கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் போலந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 0-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

போலந்து 0-2 அர்ஜென்டினா

உலக கோப்பை கால்பந்து தொடரில் புதன்கிழமையன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் போலந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின.

 போட்டியின் தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த அர்ஜென்டினா அணி பலமுறை கோல்களை அடிக்க முயற்சித்தது.

ஆனால் முதல் பாதியின் முடிவில் இரண்டு அணிகளுமே கோல் போடாததால், ஆட்டத்தின் முதல் பகுதி 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

உலக கோப்பையில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட மெஸ்ஸி: சூப்பர் 16-க்கு அர்ஜென்டினா தகுதி | World Cup Qatar 2022 Messi Misses The PenaltyFifa.com

விறுவிறுப்புடன் தொடங்கிய இரண்டாம் பாதியில் போலந்து வீரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 46வது நிமிடத்தில் மெக்அலிஸ்டர் கோல் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் மெக்அலிஸ்டர் தனது முதல் சர்வதேச கோலைப் அடைந்தார்.
போட்டியில் 0-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற அர்ஜென்டினா அணி போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.

ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் மற்றொரு அர்ஜென்டினா வீரர் அல்வார்ஸ் தனது அணிக்காக மற்றொரு கோல் அடித்து அசத்தினார். 

ஆட்டத்தின் இறுதி வரை கோல் அடிக்க போலந்து அணி போராடியும் முடியாததால், போட்டியின் இறுதி நேர முடிவில் 0-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலை பெற்று போட்டியையும் வெற்றி பெற்றது.

முதல் இடத்தில் அர்ஜென்டினா

சவுதி அரேபியா அணியுடன் அடைந்த அதிர்ச்சி தோல்விக்கு பிறகு, அர்ஜென்டினா அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று குரூப் சி பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதனால் சூப்பர் 16 சுற்றில் அர்ஜெண்டினா அணி அவுஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள உள்ளது. குரூப் சி பிரிவில் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்த போலந்து அணி உலக சாம்பியனான பிரான்ஸை எதிர்கொள்ள உள்ளது.


பெனால்டி தவறவிட்ட லியோனஸ் மெஸ்ஸி

போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளுமே கோல் அடிக்க போராடி கொண்டு இருந்த போது, ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் போலந்து கோல்கீப்பர் வோஜ்சிக் ஸ்க்செஸ்னி(Wojciech SZCZESNY) பந்தை காப்பாற்றும் போது அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியின் முகத்தில் அவரது கைப்பட்டது, இது அவரை தாக்கியது போல இருந்ததால் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

உலக கோப்பையில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட மெஸ்ஸி: சூப்பர் 16-க்கு அர்ஜென்டினா தகுதி | World Cup Qatar 2022 Messi Misses The PenaltyFifa.com

இந்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்துவதற்காக முன்வந்த அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, பந்தை கம்பத்தின் மூலையை நோக்கி அடித்தார், அப்போது போலந்து கீப்பர் வோஜ்சிக் ஸ்க்செஸ்னி தனது உடலை சரித்து கைகளால் பந்தை வலைக்கு வெளியே தள்ளினார்.

இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் 2 பெனால்டிகளை தவறவிட்ட முதல் வீரர் லியோனல் மெஸ்ஸி ஆனார். 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.