கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை..!

இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால், கிறிஸ்துமஸ் மறு நாளை (டிசம்பர் 26-ம் தேதி) அரசு விடுமுறையாக அறிவித்து மேற்கு வங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில், இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறு நாளை (டிசம்பர் 26-ம் தேதி) அரசு விடுமுறையாக அறிவித்து மேற்கு வங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி, மாநில அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பிற அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் வருகிற டிசம்பர் 26-ம் தேதி (கிறிஸ்துமசுக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.