மதுரை: கோயில் இணையதளங்கள் குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாக பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிரபல கோயில்களின் பெயரில் இணையதளங்கள் தொடங்கி மோசடி நடைபெறுவதாக வழக்கு தொடரப்பட்டது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், மார்கண்டன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை ஐகோர்ட் மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
