போதைப்பொருட்களை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்காக சுமார் 5000 போதைப்பொருள் பரிசோதனை சாதனங்கள் பொலிஸாருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மேல் மாகாணத்தில் கொக்கெய்ன் மற்றும் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளோம்.
முன்னர், போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்பட்டன. இருப்பினும், இந்த புதிய கருவி மூலம், அந்த இடத்திலேயே சோதனை நடத்தி, இதுபோன்ற ஓட்டுனர்களை கண்டறிய முடியும்.”என கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகி்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,