டிசம்பர் 1: இன்று முதல் உங்கள் பட்ஜெட்டில் கூடுதல் செலவு கொடுக்கும் விஷயங்கள்

New Rules from December 1: மாதந்தோறும் முதல் தேதியன்று ஏற்படும் மாற்றங்களைப் போலவே, டிசம்பர் 1ம் நாளான  இன்று முதல் பல மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்களில் சில உங்களுக்கு பயனளிக்கும், சில உங்கள் மாதந்திர பட்ஜெட்டை அதிகரிக்கும். பொதுமக்களின் தினசரி வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய மாற்றங்கள். இன்று முதல் உங்களுக்கு கார் வாங்குவது விலை உயர்ந்ததாகிவிட்டது. டிசம்பர் 1 முதல்,  மூன்றாம் நபர் காப்பீடு தொடர்பான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காப்பீட்டு கட்டணத்தின் அதிகரிப்பு சிறிதளவே என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 1 முதல், PNB வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. இன்று முதல் PNB வாடிக்கையாளர்கள் முன்பு போல் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க முடியாது. ஏடிஎம் இயந்திரத்தில் கார்டைச் செருகும்போது, ​​பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு OTP வரும். பதிவு செய்த பின்னரே பணத்தை எடுக்க முடியும்.

எல்பிஜியுடன், சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி மதிப்பாய்வு செய்து மாற்றி அமைக்கப்படுகின்றன. கடந்த ஐந்து மாதங்களாக வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்கள் விலை குறைந்துள்ளன. இம்முறை வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, ATF விலையிலும் மாற்றம் இருக்கலாம்.

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 30 நவம்பர் 2022 என்று இருந்தது. இதுவரை ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்காதவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படலாம்.

டிசம்பரில் பனி மூட்டம் அதிகரித்து வருவதால், ரயில்வே அட்டவணையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் கீழ், ஒவ்வொரு ஆண்டும் பல ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது. 1 டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை சுமார் 50 ரயில்களை ரயில்வே ரத்து செய்துள்ளது.

வங்கிகள் 14 நாட்கள் விடுமுறையாக இருக்கும் என்பதால் அதற்கு ஏற்றாற் போல திட்டமிடவும்

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை பட்டியலில், டிசம்பர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் செயல்படாது. இரண்டாவது-நான்காவது சனி, ஞாயிறு தவிர, பண்டிகை விடுமுறைகளும் இந்த 14 நாட்களில் அடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.