மணப்பாறை அடுத்த பூமாலைபட்டியை சேர்ந்த ராஜா என்பவரின் வீட்டில், சிபிசி சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிறார் ஆபாச வீடியோக்களை வெளிநாட்டுக்கு அனுப்பியது தொடர்பாக ராஜாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பூமாலை பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரின் மகன் ராஜா (44 வயது) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு தற்போது பூமாலைபட்டியல் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று ராஜாவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட தகவலின் படி, ராஜா தன்னுடைய செல்போன் மற்றும் லேப்டாப்பில் சிறார்களின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிறக்கம் செய்துள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த சிறார்கள் ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளிநாடுகளுக்கு இவர் விற்பனை செய்து உள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து தலைநகர் டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரி குழு, ராஜாவின் வீட்டுக்குள் அதிரடியாக உள்ளே நுழைந்து இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ராஜா அவரின் தந்தையிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறார்களின் ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பதும், பதிவேற்றம் செய்வதும், அதனை பகிர்வதும் சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.