திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் நிறைவேற்றிய தீர்மானங்களின் விவரங்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.ராசா, துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு முதல் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
image

திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு :-

தீர்மானம் 1: பேராசிரியர் நூற்றாண்டு நிறைவைப் போற்றும் வகையில் 19.12.2022 அன்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் திருவுருவச் சிலை நிறுவி, அந்த வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்று அழைக்கப்படும். கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும்.

தீர்மானம் 2: டிசம்பர் 15 ஆம் தேதி பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு – தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்.

image
இந்த அறிவிப்புகளை வெளியிட்ட திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் இந்தக் கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளப்படுவதாக கூறினார். அதேபோல், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் டிசம்பர்17 அன்று பேராசிரியரின் பொது வாழ்வைப் போற்றிடும் கவியரங்கமும், டிசம்பர்18 அன்று வடசென்னையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாகவும்,  19 ஆம் தேதி அன்று  மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் – கிளைக் கழகங்களின் சார்பிலும், துணை அமைப்புகளான அணிகள் சார்பிலும் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்திடவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், பெரியகருப்பன், செந்தில் பாலாஜி, மயிலை த.வேலு, வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.