திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றுமுன்தினம் 69,211 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 26,764 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். மேலும் உண்டியலில் ரூ.5.11 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 27அறைகள் நிரம்பியுள்ளது. இதனால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆகிறது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
