ஆமதாபாத்: குஜராத் சட்டசபை முதல் கட்ட தேர்தலில், பா.ஜ., தலைவர் சி.ஆர். பாட்டீல், ஜடேஜா மனைவி, பூபேந்திர படேல் உள்ளிட்ட தலைவர்கள் இன்று(டிச.,01) ஓட்டளித்தனர்.
குஜராத்தில் இன்று(டிச.,01) முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. 89 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குஜராத்தில் மொத்தம் 4 கோடியே 91 லட்சத்து 35 ஆயிரத்து 400 வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தேர்தலுக்காக, 34 ஆயிரத்து 324 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 38 ஆயிரத்து 749 வி.வி.பி.ஏ.டி., எனப்படும் ஓட்டுச்சீட்டு உறுதி இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 2.20 லட்சம் பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத்தில் இன்று(டிச.,01) முதல் கட்ட தேர்தல் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், டிச.,5ம் தேதி 2ஆம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் நடக்கிறது.
தலைவர்கள் ஓட்டளிப்பு:
பா.ஜ., தலைவர் சி.ஆர். பாட்டீல், ஜடேஜா மனைவி, பூபேந்திர படேல் உள்ளிட்ட தலைவர்கள் ஓட்டளித்தனர்.
பாஜ., வெற்றி பெறும்:
ஓட்டளித்த பிறகு பாஜ.,ரிவாபா ஜடேஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: எந்த சிரமமும் இல்லை. ஒரே குடும்பத்தில் வெவ்வேறு சித்தாந்தம் கொண்டவர்கள் இருக்கலாம். ஜாம்நகர் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம், இந்த முறையும் பாஜ.,நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும்
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், அதிக வாக்காளர்கள் இந்த தேர்தலில், ஓட்டளித்து புதிய சாதனை நிகழ்த்த வேண்டும்.
முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி அறிக்கையில் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்