வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின், போலி முத்திரை பதிவுகளை பயன்படுத்தி ,பெண்களை ஓமானுக்கு அனுப்ப முயன்ற பெண் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யும் போது கடவுச்சீட்டில் ஒட்டப்படும் முத்திரையை போலியான முறையில் பயன்படுத்தி ஓமானுக்கு செல்ல முயன்ற இரு பெண்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, கொழும்பு ஆட்டுப்பெட்டித் தெருவைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட பெண்ணின் தகவல்கள் கிடைத்துள்ளன.
யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட இந்த இரண்டு பெண்களும் வெளிநாடு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஒன்றரை மாதங்கள் கைது செய்யப்பட்ட பெண்ணின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இவர்கள் இருவரும் வெளிநாடு செல்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இந்தப் பெண் செய்து கொடுக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்துடன் இன்னொருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர் அந்நபரின் தகவலை விசாரணை அதிகாரிகளிடம் கூற மறுத்துள்ளார். சந்தேகநபர் 08.12.2022 அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சரத் விமலவீர, மிஹிராஜ் சர்மிந்த, எம்.கே.சுமணவீர, கே.எல்.என்.தமயந்தி, கயேஷா சுபாஷினி ஆகியோரினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.