சாபாலோ,: மாஜி கால்பந்து ஜாம்பவான் பீலே,82 உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாஜி கால்பந்து ஜாம்பவானான பீலே, 80 உலக கோப்பையை வென்ற பிரேசில் அணியில் 3 முறை இடம் பிடித்தார் . கடந்தாண்டு அவருக்கு பெருங்குடலில் சிறிய கட்டி (புற்றுநோய் ) இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று பீலேவுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருங்குடல் பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும், டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் குணமடைவார் என அவரது மகள் கெல்லி நஸிமென்டோ , இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement