ஹைதராபாத் தெலுங்கானாவில், மாணவியரை ஓட ஓட விரட்டி பிரம்பால் விளாசித் தள்ளிய ஆசிரியை மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தெலுங்கானாவில் காமரெட்டி மாவட்டத்தின் மட்னுார் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவி, மொபைல் போனில் ஆசிரியையை படம் எடுத்தார். பின் அந்தப் படத்தை சமூக வலைதளத்தில், ‘போரிங் கிளாஸ்’ என தலைப்பிட்டு வெளியிட்டார்.
இந்த தகவல், ஆசிரியைக்கு நேற்று தெரிய வந்தது. இதையடுத்து, அவர் அந்த மாணவியுடன் அவருடைய வகுப்புத் தோழிகள் சிலரையும், ஓட ஓட விரட்டி பிரம்பால் விளாசித் தள்ளினார்.
இந்தச் சம்பவத்தை மற்றொரு மாணவி மொபைல் போனில் ‘வீடியோ’ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இதைப் பார்த்த ஏராளமானோர் ஆசிரியைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மாணவியை அழைத்து விசாரித்த போலீசார், ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்தனர்.
ஆசிரியையின் இந்தக் கொடூர செயலைக் கண்டித்து, சில மாணவியர் பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement