சென்னை: கட்டுமானம் மற்றும் கட்டமைப்புத் துறையில் சிறந்து விளங்கும் பொறியாளர்கள் பலர், தமிழ்ச் சமுதாயத்தின் பொதுவெளியில் இன்னமும் அறியப்படாமல் உள்ளனர். அவர்களைத் தேர்வுசெய்து, ‘சீர்மிகு பொறியாளர் விருது-2022’-ஐ வழங்கி, பாராட்டி கவுரவிக்கும் முயற்சியில் ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் உடன் இணைந்து ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்தது.
இவ்விழாவை ரினாகான் ஏ.ஏ.சிப்ளாக்ஸ், சூர்யதேவ் அலாய்ஸ் அண்ட் பவர் பிரைவேட் லிமிடெட்,லெட்சுமி செராமிக்ஸ், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம் ஆகி யன இணைந்து வழங்குகின்றன.
இந்த விருது வழங்கும் விழா இன்று (டிச.1) மாலை 4 மணிக்கு சென்னை டிடிகே சாலையிலுள்ள மியூசிக் அகாடமியில் நடைபெறு கிறது.
தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த பொறியாளர்களுக்கு, கிராமப்புற வீட்டுக் கட்டுமானம், நகர்ப்புற குடியிருப்புக் கட்டுமானம், பொதுச் சேவை கட்டமைப்புகள், பொதுப் பயன்பாடு கட்டமைப்புகள், தொழிற்சாலைக் கட்டமைப்பு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட உள்ளது.
தா.மோ.அன்பரசன் பங்கேற்பு
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,அண்ணா பல்கலை. முன்னாள் டீன் டாக்டர் ஏ.ஆர்.சாந்தகுமார், ராம்கோ சிமென்ட்ஸ் தலைமை செயல் அதிகாரி ஏ.வி.தர்மகிருஷ்ணன், அதன் செயல் இயக்குநர்(மார்க்கெட்டிங்) பாலாஜி கே.மூர்த்தி ஆகியோர் பங்கேற்கின் றனர்.
கட்டுமானம் மற்றும் கட்டமைப்புத் துறையில் திறன்மிக்க 35 பொறியாளர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு ‘சீர்மிகு பொறியாளர் விருது-2022’ வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.