ஐதராபாத்: விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் சார்பில் தயாராகும் பான் இந்தியா படத்தில் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு ஆகியோர் இணைகின்றனர். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பான் இந்தியா படம், ‘ஆர்ஆர்ஆர்’. இப்படத்தை தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இதுவும் பான் இந்தியா படமாக உருவாகிறது. ராம் சரண் ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். இதையடுத்து ராம் சரண் நடிக்க உள்ள புதிய படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. ‘உப்பெனா’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான புச்சி பாபு சனா, அடுத்து ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்குகிறார். மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் பற்றி விவைில் அறிவிக்கப்படும்.