வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ஆம் திகதி முதல் மேலதிகமாக ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
விசேட அறிக்கை
நாடாளுமன்றில் இன்றைய தினம் வெளியிட்ட விசேட அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் எவ்வித அபராதமும் அறவிடப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.