பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ நகரில் வசித்து வருகிறார் ஆர்தர் ஓ உர்சோ. இவருக்கு ஒன்பது மனைவிகள் உள்ளனர். லுவானா கஜகி என்பவரை முதலில் திருமணம் செய்திருக்கிறார். இதை அடுத்து மேலும் எட்டுப் பெண்களை திருமணம் செய்திருக்கிறார்.
10 பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரின் லட்சியம் என்பதால் பத்தாவது திருமணம் செய்யப்போகிறேன் என்று சொல்லி வருகிறார் . 9 மனைவிகள் இருந்தாலும் ஆர்தருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார்.
ஒவ்வொரு மனைவிக்கும் குழந்தை பிறக்க வேண்டும், அதாவது 9 மனைவிகளுக்கும் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்திருக்கிறார் ஆர்தர். இவர் 9 மனைவிகளுடன் ஒன்றாக குடித்தனம் நடத்தி வருகிறார் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.9 மனைவி இருக்கையில் எந்த நேரத்தில் எந்த மனைவியுடன் தாம்பத்தியுடன் இருப்பது என்பது குறித்து ஒரு பட்டியலே போட்டு வைத்திருக்கிறார்.
இந்நிலையில், அகத்தா என்ற இவரது மனைவி ஆர்தரை விட்டு பிரிவது என முடிவு செய்துள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம், தனக்கு மட்டுமே ஆர்தர் வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளார். அப்படியில்லை என்றால் என்னை மன்னித்து விடவும் என கூறியுள்ளார்.
ஆனால், அது சாத்தியமில்லை என ஆர்தர் மறுத்துள்ளார். எனது ஒரு மனைவியை இழந்து விட்டாலும் அதனை வேறொருவரை கொண்டு நிரப்ப போவதில்லை என கூறினார். ஆனால், திடீரென அவரது எண்ணம் மாறி விட்டது. 9 பேரை திருமணம் செய்துள்ள ஆர்தர், அடுத்து 10-வது திருமணம் செய்ய போகிறேன் என கூறியுள்ளார்.