விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையில் சென்ற வாரம் நடைபெற்ற எவிக்ஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருக்கிறார். இதற்கிடையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் தனலட்சுமி, ஜனனி, மைனா, ரச்சிதா, குயின்சி, கதிரவன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். மேலும் இந்த வார கேப்டனாக அஜீம் தேர்வாகி உள்ளார். இதனிடையே பிக்பாஸ நிகழ்ச்சியில் பங்கேற்றதில் இருந்தே சக போட்டியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் அசீம். அதோடு சக போட்டியாளர்களையும் மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார் அசீம்.
இந்த நிலையில் அதோடு சக போட்டியாளர்களையும் மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார் அசீம். இந்த டாஸ்க்கின் போது அசீம் – அமுதவாணனின் சண்டை குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அந்த வீடியோவில் ஏலியனாக உள்ள அமுதவாணன், பழங்குடி இன மக்களில் ஒருவரான கதிரை பிடிக்கிறார். அப்போது உள்ளே வந்த அசீம் அமுதவாணனை ஆக்ரோஷமாக அடித்து தள்ளி விடுகிறார். அமுதவாணன் என்னை அடித்தாய் என அசீம்மிடம் கூற, நெஞ்சில் உரம் இருந்தால் என்னை அடிடா என ஆவேசமாக கத்துள்ளார்.
This is the moment #Amudhavanan says #Azeem pushed him . Looks like #ClownAzeem pushed #Amudhu . #BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss6Tamil #vikraman#vikramanarmy pic.twitter.com/KfIQvyEETf
— siva (@winsiva1994) November 30, 2022
தற்போது இந்த வீடியோ வைரலாகி வருவதுடன் இந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள், அமுதவாணனை அடித்த அசீம்முக்கு ரெட் கார்டு கொடுத்தே தீர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.