இந்தியாவில் முன்னணி பிரீமியம் ஸ்மார்ட்போன் நிறுவனமான Oneplus அதன் போன்களுக்கு இனி 4 வருட Oxygen OS வசதி மற்றும் 5 வருட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது அந்த போன் பயன்படுத்தும் அனைவரையும் மகிழ்கியில் ஆழ்த்தியுள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் 3 வருட OS அப்டேட் வழங்கும் நிலையில் Oneplus நிறுவனமும் கூடுதலாக 4 வருடம் வழங்குவது சிறப்பான ஒரு முயற்சி ஆகும்.
இந்த புதிய முயற்சி காரணமாக இனி
Oneplus ஸ்மார்ட்போன்களை
மிகவும் தைரியமாக வாங்கலாம். மேலும் அதிக காலம் Oneplus போன்களை நாம் பயன்படுத்தவும் முடியும். இதன் காரணமாக போன் எப்போதும் அப்டேட் நிலையிலேயே இருக்கும்.
இந்த சேவை குறித்து பேசிய Oneplus நிறுவனம் “எங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பயன அனுபவத்தை வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் எப்போதும் எங்களால் முடிந்த அளவு Oneplus போன்களை நவீன அப்டேட் கொண்ட போன்களாக மாற்ற விரும்புவதாக” தெரிவித்துள்ளது.
தற்போது Oneplus நிறுவனம் அதன் பிரீமியம் போன்களுக்கு இந்த சேவையை ஏற்கனவே வழங்கிவருகிறது. ஏற்கனவே அந்த நிறுவனத்தின்
Oneplus 8, oneplus 9 மற்றும் Oneplus 10
ஆகிய சீரிஸ் போன்களுக்கு வழங்கிவருகிறது.
குறைந்த விலை போன்களான Oneplus 7, Oneplus Nord, Oneplus Nord 2 ஆகிய போன்களுக்கு 2 வருட அப்டேட் வழங்குகிறது. ஏற்கனவே Android 13 OS கொண்ட Oxygen Os 13 அப்டேட் அதன் Oneplus 8 சீரிஸ், Oneplus 9 சீரிஸ் மற்றும் Oneplus 10 சீரிஸ் ஆகிய போன்களுக்கு வழங்கியது.
Oneplus நிறுவனம் 4 வருட OS மற்றும் 5 வருட பாதுகாப்பு வழங்குவது போல samsung நிறுவனம் வருட OS அப்டேட் மற்றும் Google நிறுவனம் 3 வருட OS அப்டேட் அதன் தலைசிறந்த போன்களுக்கு வழங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்