புதிய வாழ்வைத் துவங்கலாம் என ஆயிரம் கனவுகளுடன் பண்ணை வீட்டுக்கு குடிபுகுந்த ஒரு பிரித்தானியக் குடும்பம், அந்த குடும்பத்தில் இருந்த ஆவிகள் தொல்லையால் துவம்சம் செய்யப்பட்டிருக்கிறது.
பிரித்தானியாவில், Brecon Beacons என்ற இடத்தில் அமைந்துள்ள பண்ணை வீடு ஒன்றிற்கு தங்கள் பிள்ளைகளுடன் குடிபெயர்ந்தனர் Liz Rich, Bill தம்பதியர்.
பல அமானுஷ்யங்களைக் கொண்ட வீடு
அவர்கள் அந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்ததிலிருந்தே பல அமானுஷ்யங்களை உணர்ந்திருக்கிறது அந்தக் குடும்பம்.
திடீரென காரணமே இல்லாமல் கரண்ட் பில் அதிகரிப்பது முதல், திடீர் திடீரென பண்ணை விலங்குகள் உயிரிழப்பது வரை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினை புதிது புதிதாக உருவாகிக்கொண்டே இருந்திருக்கிறது.
@BBC
பிள்ளைகள் விளையாடச் செல்லும்போது ஒரு வயது முதிர்ந்த பெண் அவர்களை முறைத்துக்கொண்டே இருப்பது, திடீரென முகம் இல்லாத ஒரு பயங்கர மனித உருவம் ஏழடி உயரத்தில் வழிமறித்துக்கொண்டு நிற்பது என தினமும் தொல்லைகள் ஆகிவிட, தினம் தினம் ஒரே போராட்டமாகியிருக்கிறது வாழ்வு.
பேய்களை விரட்ட பாதிரியார்களின் உதவியை நாடிய குடும்பம்
இப்படி தினமும் ஏதவாது ஒரு அமானுஷ்யம் நடந்துகொண்டே இருந்ததால், தேவாலயத்தின் உதவியை நாடியிருக்கிறார்கள் தம்பதியர்.
பாதிரியார்கள் வந்து பேய்களை ஓட்ட, கொஞ்ச நாட்கள் வீடு அமைதியாகும். பின்னர் மீண்டும் பிரச்சினைகள் தலைதூக்கும்.
@BBC
ஒரு கட்டத்தில் Liz உடலுக்குள் ஆவி ஒன்று புகுந்துகொள்ள, அவர் சினிமாவில் வருவதுபோல திடீரென பயங்கரமான குரலில் பேசத்துவங்கியிருக்கிறார்.
இப்படியே ஏழு ஆண்டுகள் போராடியிருக்கிறார்கள் தம்பதியர். Liz பாதிக்கப்பட்டாலும் அவர் ஓரளவு சமாளித்துக்கொள்ள, Bill முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.
தன்னைத்தான் குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டு தனது அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கத் துவங்கிய Bill, குடித்துக் குடித்து முழுமையாக குடிகாரராகியிருக்கிறார்.
பின்னர் Lizஐப் பிரிந்ததுடன், இறந்தும் போய்விட்டார் Bill.
தற்போது, Lizக்கு 63 வயதாகிறது. நான் சொல்வது பலருக்கு கதை போலத் தெரியலாம், ஆனால், அனைத்தும் உண்மை, எதுவும் கதையில்லை என்கிறார் அவர்.
அவரது அனுபவங்களை சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் Liz பகிர்ந்துகொள்ள, அதைக் கேட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவருக்கே பயம் வந்துவிட்டதாம்!
@BBC
@Elizabeth Udall