ரஷ்ய ஜனாதிபதி புடின், உக்ரைனில் போர் நடக்கும் இடத்துக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் ரஷ்யப் படைகள்
உக்ரைனுக்குள் நுழைந்து அதை கைப்பற்றிவிடலாம் என சிறுபிள்ளைத்தனமாக முடிவெடுத்து அந்நாட்டை ஊடுருவியது ரஷ்யா.
ஆனால், அது இவ்வளவு நாள் நீடிக்கும், இவ்வளவு பெரிய போராக மாறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்நிலையில், உக்ரைனுக்கு செல்ல புடின் திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதை கிரெம்ளின் வட்டாரமும் உறுதிசெய்துள்ளது.
கிரெம்ளின் ஊடகச் செயலாளரான Dmitry Peskov, புடின், கிழக்கு உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள டான்பாஸ் பகுதிக்குச் சென்று ரஷ்யப்படைவீரர்களை சந்திக்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Image: SPUTNIK/AFP via Getty Images
புடின் உக்ரைன் செல்வதன் பின்னணி
உக்ரைனில் போர் செய்யும் ரஷ்யப் படைவீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக புடின் உக்ரைன் செல்வதாகக் கூறப்படுகிறது.
ஆனால், முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவரோ, புடின் ரஷ்யா செல்வதன் பின்னணியில் வேறொரு காரணம் இருக்கிறது என்கிறார்.
அதாவது, ரஷ்யா பிப்ரவரியில் உக்ரைனை ஊடுருவியது முதல், இதுவரை சுமார் 91,150 படைவீரர்களை இழந்துள்ளது.
அதனால், உக்ரைன் போருக்கு ரஷ்யாவிலேயே, மக்களிடையே ஆதரவு கணிசமாக குறைந்துவருகிறது என்கிறது பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சக உளவுத்துறை ஏஜன்சியின் அறிக்கை ஒன்று.
Image: AFP via Getty Images
ஆகவே, ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைன் பகுதிகளுக்குச் செல்ல இருக்கிறாராம் புடின். அதாவது, பாருங்கள், நாம் இந்த பகுதிகளைக் கைப்பற்றிவிட்டோம், இது ரஷ்யாவுக்கு சொந்தமான இடம் என்பதை ரஷ்ய மக்களுக்குக் காட்டுவதற்காகவே புடின் உக்ரைனுக்குச் செல்கிறாராம்.
ஆனால், புடின் உக்ரைன் சென்றால், அவருக்கு உக்ரைன் படைகளால் ஆபத்து ஏற்படலாம் என கருதப்படுகிறது.
அத்துடன், நீண்ட நாட்கள் போர்க்களத்தில் இருந்து, தங்கள் சகாக்கள் பலரை இழந்துள்ள, நம்பிக்கை இழந்த நிலையில் காணப்படும் ரஷ்ய வீரர்களின் வெறுப்பையும் அவர் எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் கருதப்படுகிறது.