லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படம் உருவாக்கப்போவது குறித்து எப்போது தகவல்கள் கசிந்ததோ அப்போதிலிருந்தே ரசிகர்கள் பலரும் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காக காத்துகொண்டு இருக்கின்றனர். ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாகவும் அடிக்கடி அப்டேட்டுகளும் வெளியாகிக்கொண்டே இருக்கிறது, தற்போது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக ஒரு மாஸான அப்டேட் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதாவது அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த ‘தளபதி 67’ படத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டது. இன்று சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோஸில் ‘தளபதி 67‘ படத்திற்கான பூஜை தொடங்கியது. விக்ரம் படத்திற்கு செய்தது போன்று தளபதி 67 படத்திற்கான ப்ரோமோ வீடியோவையும் படக்குழு உருவாக்கவுள்ளது.
‘தளபதி 67’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் தொடங்கப்படும் என்றும் இப்படத்திற்காக விஜய் நீண்ட நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 4 மாதங்கள் வரை பிரத்யேகமாக இப்படத்திற்காக ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையிலும், இரண்டாம்கட்ட படப்பிடிப்பை காஷ்மீர் பகுதியிலும் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற பட பூஜையில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது, விரைவில் இந்த புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் பகுதியில் நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது, பான்-இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ள ‘தளபதி 67’ படத்தில் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிபடங்களை சேர்ந்த பிரபலமான நடிகர்களும் நடிக்கவிருப்பதாக கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது வாரிசு படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.