திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் சொகுசு பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுச்சாலையில் தனியார் சொகுசு பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தினால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பலத்த காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.