மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் (MAHER) வேந்தர் மற்றும் ஸ்ரீ முத்துக்குமரன் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான திரு. A.N. இராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் காலை 7 மணி அளவில் இயற்கை எய்தினார்.
தொலைநோக்கு பார்வை கொண்ட நாடு போற்றும் கல்வியாளரும், வாரி வழங்கும் கொடை வள்ளலும், பரிவு உள்ளம் உடைய மனித நேயரும், தலைசிறந்த நிர்வாகியும், மனிதப் புனிதருமாகிய தாங்கள் விட்டுச் சென்ற சீரிய பணிகள் என்றென்றும் தொடரும்.
அன்னாரது இறுதி சடங்குகள் நாளை (04.12.2022) 11 மணிக்கு சென்னையில் நடைபெறும். கண்ணீர் மல்க ஆழ்ந்த இரங்கல் செலுத்தும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள்,நண்பர்கள், நிர்வாகத்தினர், ஊழியர்கள் மற்றும் மாணவமணிகள்.