விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையில் நேற்று நடைபெற்ற எவிக்ஷனில் குயின்சி வெளியேறினார். மேலும் அந்த வாரத்திற்கான கேப்டனாக அஜீம் தேர்வாகி இருந்தார். தற்போது வரை பிக்பாஸ் சீசன் 56 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் வரும் நாட்களில் வைல்ட் கார்டு எண்ட்ரி அரங்கேறும் என்று எதிறப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான தலைவர் போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில் மணிகண்டன், தனலட்சுமி, ஷிவின் மூவரும் பங்கேற்றுள்ளனர். கயிற்றில் தொங்கியபடி மிகவும் வித்தியாசன போட்டியாக இது இருக்கிறது. ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு கயிற்றில் இரண்டு முடிச்சுகளோடு, இரண்டு கயிறுகள் கொடுக்கப்படும். ஒரு கையால் ஒரு கயிறை மட்டுமே பிடித்தபடி மற்ற போட்டியாளர்களின் கயிற்றில் இருக்கும் முடிச்சை அவிழ்த்து அதே சமயத்தில் அவரவர் கைற்றை மற்ற போட்டியாளர்களிடமிருந்து பாதுகாத்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் கீழே ஸ்ப்ரிங்கால் செய்யப்பட்ட பலகையின் மேலே நின்று கொண்டு விளையாடி வருகிறார்கள். இதில் இறுதியில் யார் தலைவராகுகிறார் என்பதை இன்று இரவு தான் தெரிய வரும்.
#Day57 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/ZgMeZwwI1q
— Vijay Television (@vijaytelevision) December 5, 2022
இது மட்டுமல்லாமல் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தனலட்சுமி எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்று வெறித்தமாக விளையாடி கொண்டிருக்கிறார். ஆனால் ரசிகர்களோ, இந்த வாரம் தனலட்சுமி கேப்டனாக இருந்தால் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமே இருக்காது என்று நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.