இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Vodafone Idea நிறுவனம் அதன் ப்ரீபெய்டு வாடிகையாளர்களுக்காக புதிதாக ஒரு 1 வருட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த அன்லிமிடெட் திட்டம் 365 நாட்களுக்கு நீடிக்கும். இந்த புதிய 1 வருட திட்டங்களாக ரூபாய் 2,999 திட்டமும், ரூபாய் 2899 திட்டமும் உள்ளது. இந்த திட்டங்களில் 850GB டாட்டா, அன்லிமிடெட் காலிங், SMS வசதி, இரவு 12 முதல் அதிகாலை 6 மணிவரை இலவச டேட்டா போன்ற திட்டங்கள் உள்ளன.
Vi 2,999 ரூபாய் திட்டம்
இந்த புதிய 2,999 ரூபாய் திட்டத்தில் ஒரு வருடத்திற்கு மொத்தமாக 850GB data, அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 SMS, 365 நாட்கள் வேலிடிட்டி போன்றவை உள்ளன. மேலும் இரவு 12 முதல் அதிகாலை 6 மணிவரை அன்லிமிடெட் டேட்டா போன்றவை உள்ளன.
இந்த இரவு நேர பயன்பாட்டிற்கு நாம் எந்த ஒரு தொகையும் செலுத்த தேவையில்லை. இதனை அந்த நிறுவனம் Vi Binge All Night Benefit என்று அழைக்கிறது.
Vi 2,899 ரூபாய் திட்டம்
இன்னொரு திட்டமான 2,899 ரூபாய் ஒரு நாளைக்கு 365 நாட்களில் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா வழங்குகிறது. இதன் மற்ற பலன்கள் அனைத்தும் 2,999 ரூபாய் திட்டத்தில் இருக்கும் அதே பலன்கள் ஆகும்.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு வார இறுதியில் அவர்கள் மீதம் வைத்த டேட்டா அளவு 2GB வரை மீண்டும் பயன்படுத்துவதற்கு கிடைக்கும். இந்த இரண்டு திட்டங்களை தவிர்த்து 3,099 ரூபாய் திட்டமும் ஒன்று உள்ளது.
அந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2GB டேட்டா, 1 வருட Disney+Hotstar Mobile திட்டம், கூடுதலாக மற்ற 1 வருட திட்டத்தின் பலன்களும் கிடைக்கின்றன.
தற்போது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறுவதால் அதற்கென தனியாக இன்டர்நேஷனல் ரோமிங் சேவை ஒன்றை அறிவித்துள்ளது. இதில் நமக்கு டேட்டா வசதி, இந்தியாவில் இருப்பவர்களிடம் தொலைபேசியில் பேசுவது, SMS போன்ற பல பலன்கள் உள்ளன. இந்த திட்டம் கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் பயன்படுத்தலாம்.
Jio மற்றும் Airtelஆகிய நிறுவனங்கள் 5G சேவைக்கு மாறினாலும் Vi நிறுவனம் 5G சேவைக்கு மாறுவதற்கு முன்னாள் அதன் தற்போதைய வாடிகையாளர்களை தக்கவைத்துக்கொள்ள அதிரடியாக பல சலுகைகள் கொண்ட திட்டங்களை அறிவித்துவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்