புதுடில்லி :பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. இதையொட்டி, அனைத்துக் கட்சி கூட்டம் இன்று(டிச.,06) நடை பெற்றது.
பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்கி, இம்மாதம் 29 வரை நடக்கிறது. இதில் விடுமுறை நாட்கள் தவிர 17 நாட்கள் நடக்கும் தொடரில் 16 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. டிசம்பா் 29-ஆம் தேதி வரை 23 நாள்கள் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் 17 அமா்வுகள் இடம்பெற உள்ளன.
பார்லி., கூட்டம் நாளை துவங்கும் நிலையில், குஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் மற்றும் ஒரு லோக்சபா தொகுதி, ஐந்து மாநிலங்களில் காலியாக உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகளும் நாளை மறுநாள் வெளியாகின்றன. இந்நிலையில், முக்கிய தீர்மானங்கள், விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கான அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது.
பங்கேற்பு:
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, காங்., லோக்சபா தலைவர் ஆதிர் ரஞ்சன், திமுக லோக்சபா தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதுபோல, சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் தலைமையில் பார்லி., நடவடிக்கைகள் ஆலோசனைக் குழு கூட்டமும் இன்று மாலையில் தனியாக நடைபெற உள்ளது. வழக்கமான அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பதிலாக இந்த முறை பிஏசி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பார்லி., செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில், மக்களவையில் முன்வைக்கப்படவுள்ள தீா்மானங்கள் மற்றும் எந்தெந்த கட்சிகள் விவாதத்தில் பங்கேற்க உள்ளன என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement