உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு பானம் தான் டீ. இது இல்லாமல் பலர் தங்களது நாளை தொடங்குவதே இல்லை.
மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை தரக்கூடியது தேநீர் அல்லது டீ. பலருக்கு தனிமையைப் போக்க, ஆசுவாசப்படுத்திக்கொள்ள, மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள என சிறந்த பானமாக இருக்கிறது.
ஆனால் டீ போட்டவுடன் எஞ்சிய டீ பேக்குகளை குப்பையில் தூக்கி போட்டு விடுவோம்.
டீயில் உள்ள நன்மைகளைப் போலவே பயன்படுத்திய டீ பேக்குகளிலும் பல்வேறு நன்மைகள் உள்ளன.
இதனை தூக்கி எறியாமல் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று இங்கே பார்க்கலாம் வாங்க.
image – reviewed
- இரவு தூங்கி எழுந்தவுடன் கண்களில் ஏற்பட்டு இருக்கும் வீக்கத்தை சரி செய்ய, பயன்படுத்திய டீ பேக்கை ஆற விட்டு பின் அதனை குளிர்சாதனப் பெட்டியில் சில நிமிடங்கள் வைக்கவும். பின்னர் அவற்றை எடுத்து கண்களின் மேல் வெள்ளரிக்காயை வைத்து இருப்பது போல் வைக்கவும். இதனால் கண்களின் இரத்த நாளங்கள் சுருங்கி, வீக்கம் குறையும்.
- சருமப் பிரச்சனை உள்ள இடத்தில் குளிர்ந்த டீ பேக்குகளை சிறிது நேரம் வைத்து இருக்கலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் சருமத்தில் ஏற்படும் வீக்கம், அரிப்பு, சரும அழற்சி போன்றவற்றைக் குறைத்து சருமத்தை சகஜமாக்க செய்யும்.
- டீ பேக்கை காயம்பட்ட இடத்தில் அழுத்தி சிறிது நேரம் வைத்துக் கொள்வதன் மூலம் அதனை சரி செய்ய முடியும். பயன்படுத்திய டீ பேக்கை தண்ணீரில் நனைத்து பின்னர் பிழிந்துவிட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விடுவதன் மூலம் அதனை சரி செய்ய முடியும்.
- சூடான மிளகு டீ உங்களின் பல் மற்றும் ஈறுகளுக்கு சிறிது ஆறுதல் அளிக்கும். மேலும், டீயில் உள்ள டோனிக் அமிலம் இரத்தம் உறைவதற்கு உதவி புரியும். இதனால் பல் பிடுங்கியவுடன் ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முடியும்.
- பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்படும் முலைக்காம்புகளின் வலிக்கு விரைவில் சிகிச்சையளிக்க பயன்படுத்திய ஒரு டீ பேக்கை வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்து விட்டு 15 நிமிடங்கள் மார்புக் காம்புகளின் மேல் மெல்ல அழுத்தி தடவ வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை இப்படி செய்வதால் போதும்.
- ஒரு டீஸ்பூன் க்ரீன் டீ இலைகளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆகும் வரை கலக்கவும். பின்னர் அந்தப் பேஸ்ட்டை 2 முதல் 3 நிமிடங்கள் வரை முகத்தில் வட்ட வடிவில் தேய்த்து காயவிடவும். அதனைத் தொடர்ந்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி, பின்னர் முகத்தை காயவிட்டு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும். இதனை வாரத்துக்கு இரண்டு முறை செய்வதன் மூலம் கரும்புள்ளிகளை நீக்க முடியும்.
- இயற்கை உரங்களுடன் டீ பேக்குகளையும் சேர்த்து வயல் அல்லது தோட்டத்துக்கு உரமாக பயன்படுத்தலாம்.
- ஷூக்களில் துர்நாற்றம் அடிக்கமால் இருக்க பயன்படுத்திய டீ பேக்குகளை காயவைத்து பயன்படுத்துவதன் மூலம் அந்த துர்நாற்றத்தைப் போக்க முடியும். வெளியில் சென்று வந்தவுடன் நீங்கள் உங்களின் ஷூக்களில் உலர்ந்த டீ பேக்குகளை போட்டு விடுங்கள். இதனால் துர்நாற்றம் காணாமல் போய்விடும்.
- கண்ணாடி கதவு மற்றும் ஜன்னல்களை சுத்தம் செய்யலாம். பயன்படுத்திய டீ பேக்குகளை பிழிந்து, அந்த பேக்குகளை கொண்டு துடைக்கலாம்
டீ பேக்குகளை ஊற வைத்த தண்ணீரை கொண்டும் கண்ணாடிகளை சுத்தம் செய்யலாம்.