`கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது' – விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தது. கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில், சீனாவின் வூஹான் மாகாணத்தில் இயங்கும் `வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி’ என்னும் ஆய்வுக்கூடத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் கசிந்திருக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹஃப் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு பணியாற்றிய முக்கிய விஞ்ஞானிகளில் அவரும் ஒருவராவார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஹஃப் என்ற விஞ்ஞானி சீனாவின் வூஹான் வைராலஜி மையத்தில் சிறிது காலம் பணியாற்றியிருக்கிறார். இவர் `The Truth About Wuhan’ (தி ட்ரூத் அபவுட் வூஹான்) என்ற புத்தகத்தில் கொரோனா தொடர்பாகவும் வூஹான் வைராலஜி மையம் தொடர்பாகவும் பல முக்கிய தகவல்களை தெரிவித்திருக்கிறார். இவர் EcoHealth Alliance என்ற அமைப்பின் துணைத் தலைவராக இருந்திருக்கிறார். இந்த அமைப்பு தொற்று பாதிப்புகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறது. இந்த புத்தகத்தின் சில பகுதிகள் பிரிட்டன் ஊடகங்களில் வெளியாகி உலக அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

ஹஃப் எழுதிய ( The Truth About Wuhan) என்னும் புத்தகத்தில், “வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் கசிந்தது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான கொரோனா வைரஸ்களை வைத்து இந்த வூஹான் ஆய்வு மையம் ஆய்வு செய்து வருகிறது. வைரஸ் ஆராய்ச்சி பற்றிய சோதனைகள் போதிய பாதுகாப்பின்றி நடைபெற்றது. இத்தகைய வெளிநாட்டு ஆய்வகங்களில் போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை. கொரோனா வைரஸ் இரண்டு வருடங்களுக்கு முன் மனிதனால் உருவாக்கப்பட்டது.

அமெரிக்க அரசின் நிதியுதவியை கொண்டே, இந்த கிருமி சீனாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டது. இத்தகைய ஆபத்தான ‘உயிரி தொழில்நுட்பத்தை’ சீனர்களுக்கு மாற்றியதற்கு அமெரிக்க அரசாங்கமே காரணம்” எனத் தெரிவித்திருக்கிறார். சமீபத்திய விசாரணைகளின் அடிப்படையில், வூஹான் மாகாணத்தில் அமைந்துள்ள ஆய்வுக்கூடம் ஆபத்தான கொரோனா தொற்றுக்கு தாயகமாக விளங்குகிறதாக குற்றம்சாட்டப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.