சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் கோப்ரா படுதோல்வியடைந்தது. பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதனையடுத்து அவர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் படம் உருவாகிறது. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இரஞ்சித்துடன் இணைந்து எழுத்தாளர் தமிழ்ப்பிரபா திரைக்கதை எழுதுகிறார். முதல்முறையாக இரஞ்சித்தும் விக்ரமும் இணைந்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு பன்மடங்காக அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில் சமீபத்தில் படத்தின் க்ளிம்ப்ஸும், டைட்டிலும் வெளியானது. அதன்படி படத்துக்கு தங்கலான் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. க்ளிம்ப்ஸை பார்க்கும்போது படம் பீரியட் ஃபிலிமாக உருவாகியிருப்பதும், கோலார் தங்க வயலின் ஆரம்பகாலக்கட்டத்தின் அடிப்படையில் படம் உருவாகியிருப்பதும் உறுதியாகியுள்ளது.
மேலும் படத்தில் பசுபதி, பார்வதி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படமானது பான் இந்தியா படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஒகேனக்கல் பகுதியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
இன்று ஒகேனக்கல் அருகில் #Thangalaan படப்பிடிப்பு.கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.‘Pack-up’ என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?!அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம். pic.twitter.com/6NCiU6ezGQ
— Vikram (@chiyaan) December 5, 2022
இந்நிலையில் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று ஒகேனக்கல் அருகில் #Thangalaan படப்பிடிப்பு.கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.‘Pack-up’ என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?!அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம்” என குறிப்பிட்டு பா.இரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினருடன் குளிக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.